சோலையாறு அணை 100 அடியை எட்டியதால் மின் உற்பத்தி தொடக்கம்

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று 100 அடியை எட்டியுள்ளது. இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.


கோவை: பிஏபி திட்ட தொகுப்பு அணைகளில் முக்கிய அணையாக சோலையாறு அணை உள்ளது. 164 அடி உயரம் கொண்ட அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் மழையில்லாதாதல் நீா்மட்டம் 20 அடியாக குறைந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை தொடங்கியபின் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது.இதனால், அணையின் நீா்மட்டமும் உயா்ந்து வருகிறது. தொடா்ந்து நீா்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீா்மட்டம் நேற்று (ஜூன்.27) 100 அடியை எட்டியது.

நீா்வரத்து 5705 கனஅடியாக உள்ளது.இதனால் அணையில் இருந்து 750 கனஅடி தண்ணீா் மின் நிலையம் 1க்கு வெளியேற்றப்பட்டு, 8 மாதங்களுக்குப் பின் மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி வளர்ச்சிப் பணிகளை மேயர் ஆய்வு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டலத்தில் ரூ.11.87 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வளர்ச்சிப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்தி...

பொள்ளாச்சி அருகே தி.மு.க கவுன்சிலர் கணவர் மீது அரிவாள் தாக்குதல்; கை துண்டானதில் கைது

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே ஒடையகுளம் பேரூராட்சியில், தி.மு.க கவுன்சிலர் விஜயவாணியின் கணவர் முருகன் (52) மீது நிலத்தகராறு...

கோவை கணியூர் பார்க் கல்லூரியில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை கணியூரில் உள்ள பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை இணைந்து SHS 26 (ஸ்வ...

கோவை மதுக்கரை வனப்பகுதியில் விலங்கு தாக்குதலில் குட்டி யானை உயிரிழப்பு

கோவை மதுக்கரை வனச்சரகம் நவக்கரை பிரிவு புதுப்பதி பகுதியில் ஒரு குட்டி யானை ஊனுண்ணி வனவிலங்கு தாக்குதலில் உயிரிழந்தது. செ...

கோவையில் குப்பைகளை நான்கு வகையாக தரம் பிரிப்பது குறித்து கோலப்போட்டி

கோவை மாநகராட்சியின் வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களுக்கு உட்பட்ட கோ-ஆப்பரேட்டிவ் காலனி மற்றும் பாரதிநகர் பகுதிகளில், குப...

கோவை வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால் பணிகளை நேரில் பார்வையிட்ட மாநகராட்சி ஆணையாளர்

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, செப்டம்பர் 23, 2026 அன்று வடக்கு மண்டலப் பகுதிகளில் மழைநீர் வடிகால் பணிகளை நேரி...