கோடை காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம்

கோயம்புத்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோடை காலத்தில் கோவை மாவட்டம் முழுவதும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. 



கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசுகையில், “ புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஏழை எளிய மக்கள் ஏற்றம் பெற வேண்டுமென்று பல்வேறு அரசு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகின்றார்கள். இந்தியாவிலேயே தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற திட்டங்கள் இல்லை. குறிப்பாக புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு முதலமைச்சர் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள். கோயம்புத்தூர் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து திட்டங்களும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

மேலும், தமிழகத்தில் முதன்முறையாக 162 வருடங்களுக்கு முன்னர் இது போன்ற வறட்சி காணப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சூழ்நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களுடைய அரசு குடிநீர் கையிருப்புள்ள குடிநீர் ஆதாரங்களாக பில்லூர் அணை, பவானி ஆற்று நீர், ஆழியார் ஆற்று நீர், சிறுவாணி அணை ஆகிய நீர் ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்கள் மூலமாக பெறப்படும் குடிநீர் சீரான முறையில் விநியோகிக்கப்பட்டு செயல்படுத்தி இந்த வறட்சி காலத்திலும் மக்களின் தேவையை பூர்த்தி செய்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு வரக்கூடிய 2048 ஆண்டின் எதிர்வரும் மக்கள் தொகை கணக்கில் கொண்டு அவர்களுக்கு தேவையான குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு, பில்லூர் அணை ஆதாரமாக கொண்டு ஒரு குடிநீர் திட்டம் தயார் செய்வதற்கு மதிப்பீடு செய்வதற்கு விரிவான திட்ட அறிக்கையை தயார் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. 

மேலும், கோவை மாவட்டத்தில் நடைபெற்று வரும் காந்திபுரம் மேம்பாலப்பணிகள் மற்றும் இதர வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்திட சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கோயம்புத்தூர் மாநகராட்சியில் அனைத்து வார்டுகளுக்கும் சீரான கால அளவில் குடிநீர் வழங்க உரிய திட்டம் தயாரித்து அதன்படி நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும், பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு மாநகராட்சி மூலம் அனைத்து திரையரங்குகள், உள்ளுர் தொலைகாட்சிகள், வானொலிகள், வாகனங்கள் மூலம் ஒளிப்பெருக்கி வைத்து விளம்பரம் செய்வதும், வீதிவீதியாகச் சென்று துண்டுப்பிரசுரங்கள் மூலமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆகவே, பொது மக்கள் தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.” இவ்வாறு அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன், மாநகராட்சி துணை ஆணையாளர் காந்திமதி, மாவட்ட வருவாய் அலுவலர் துரைரவிச்சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜா, மாநகரப் பொறியாளர் (பொ) பார்வதி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஆலோசகர் சம்பத்குமார், செயற்பொறியாளர்கள் சுகுமார், ரவிச்சந்திரன், மாநகராட்சி செயற்பொறியாளர் ஞானவேல், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் குடிநீர் விநியோக பொறியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...