கோவை அவினாசி சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோவை அவினாசி சாலையில் மேம்பால பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாற்றப்பட்ட பாதைகளை பயன்படுத்தி வாகனங்கள் அவினாசி சாலையை அடையலாம்.


கோவை: கோவை மாநகர போக்குவரத்து போலீசார் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அவினாசி ரோடு மேம்பாலப் பணி நடைபெற்றுக் கொண்டிருப்பதால் கீழ்க்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அண்ணா சிலையிலிருந்து அவினாசி ரோடு செல்லக்கூடிய வாகனங்கள் லட்சுமி மில் சந்திப்பிலிருந்து வலதுபுறமாக திரும்பி புலியகுளம் வழியாக இராமநாதபுரம் சந்திப்பில் இடது புறமாக திரும்பி திருச்சி ரோடு வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

அவினாசி சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் பயனியர் மில் வழியாக இடது புறமாக திரும்பி இரயில்வே மேம்பாலம் வழியாக காந்தி மாநகர் சென்று தண்ணீர் பந்தல் எஸ் பெண்ட் வழியாக டைடல் பார்க் சென்று அவினாசி ரோட்டை அடையலாம் அல்லது கொடிசியா வழியாக அல்லது காளப்பட்டி வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

சிங்காநல்லூரிலிருந்து அவினாசி ரோடு செல்பவர்கள் காமராஜர் சாலை வழியாக செல்லாமல் சிங்காநல்லூர் சந்திப்பிலிருந்து ஒண்டிப்புதூர், L&T பைபாஸ் சாலை வழியாக அவினாசி சாலையை சென்றடையலாம்.

வாகனங்களைப் பயன்படுத்துவோர் சத்தி சாலை மற்றும் திருச்சி சாலையைப் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பயன்படுத்தி அவினாசி சாலையில் பீளமேடு, ஹோப்ஸ் காலேஜ் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...