ஆலந்துறை திருவிக நகர் குடியிருப்பு பகுதியில் சூழ்ந்த மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

திருவிக நகர் குடியிருப்பு பகுதிகளில் சூழ்ந்துள்ள மழைநீரால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் மழைநீரை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று ஜூன்.26ம் தேதி இரவு கனமழை கொட்டி தீர்த்தது. கன மழை காரணமாக தொண்டாமுத்தூர் அடுத்த ஆலந்துறை திருவிக நகர் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது.இதனால்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

மழை நீரில் கழிவு நீரும் கலந்திருப்பதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள், வேலைக்கு செல்லும் ஆண்கள் மற்றும் பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருகின்றனர்.இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் தற்போது வரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டும் அப்பகுதி வாசிகள், வழக்கமாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கும் இடங்களில் உடனடியாக மோட்டார் மூலம் மழை நீரை அகற்றும் பணியில் ஊராட்சி நிர்வாகத்தினர் ஈடுபடுவது வழக்கம்.

ஆனால் தற்போது வரை யாரும் வராத நிலையில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும் ஊராட்சி நிர்வாகம் இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து மழை நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என இன்று ஜூன்.27 கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...