ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மோசடி வழக்கு - கோவையில் பெண்ணை கைது செய்த நொய்டா போலீசார்

ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. மோசடி தொடர்பான வழக்கில் கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வரும் சுகன்யாவை நொய்டா போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.



கோவை: போலியான ஆவணங்கள் தயாரித்து ரூ.10 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி., மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய கோவையை சேர்ந்த பெண்ணை, நொய்டா போலீசார் கைது செய்துள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம், நொய்டாவில் ரூ.10 ஆயிரம் கோடிக்கு சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.,) மோசடி நடந்தது தொடர்பாக, கடந்தாண்டு ஜூன் மாதம் வழக்கு பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக இ-வே பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை (ஐ.டி.சி.,) பெற்றும் மோசடி நடந்துள்ளது. இதுதொடர்பாக, டில்லி, ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரசேதம் மாநிலங்களில் இதுவரை, 45 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியை சேர்ந்த சுகன்யா என்பவர், மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இவர் கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வருகிறார். போலி நிறுவனங்களின் பெயரில், ஐ.டி.சி., பெற்று கடந்த ஓராண்டில் ரூ.14.2 கோடி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்துதலைமறைவாக இருந்த சுகன்யா மீது மோசடி உட்பட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இவர் குறித்து தகவல் தருவோருக்கு, ரூ.25 ஆயிரம் வெகுமதி வழங்கப்படும் எனவும், மூன்று மாதங்களுக்கு முன்பு நொய்டா போலீசார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், இவர் இருக்கும் தகவல் அறிந்து, நொய்டா போலீசார் கடந்த, 22ம் தேதி கோவை வந்தனர். பின்னர் கோவை போலீசாரின் உதவியுடன், ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்.

Newsletter

Tragedy in Tiruppur: Conductor Sleeping in Front of Bus Run Over, Killed

A 23-year-old bus conductor was killed in a tragic accident in Tiruppur after a private bus driver allegedly failed to n...

திருப்பூரில் பரிதாபம்: பேருந்து முன்பாக படுத்திருந்ததை கவனிக்காத ஓட்டுனர் – நடத்துனர் பலி.

திருப்பூரில் பேருந்தின் முன்பாக படுத்து உறங்கியிருந்த இளம் நடத்துனர் சூர்யா (23) மீது, ஓட்டுனர் கவனிக்காமல் பேருந்தை இயக...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவ கனவை சிதைத்த ஒன்றிய அரசு - நீட் தேர்வு ரத்து கோரி பல்சமய நல்லுறவு இயக்கம் வலியுறுத்தல்

கோயம்புத்தூரில் பல்சமய நல்லுறவு இயக்கம் நீட் தேர்வில் நடக்கும் முறைகேடுகளை கண்டித்து, வட மாநிலங்களில் வினாத்தாள் கசிவு ம...

22 லட்சம் மாணவர்களின் மருத்துவக் கனவை சிதைத்த ஒன்றிய அரசு - முறைகேடுகளுடன் நடக்கும் NEET தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்

NEET தேர்வில் தொடர் முறைகேடுகள் நடந்து வருவதாக குற்றம்சாட்டி, பல்சமய நல்லுறவு இயக்கம் உடனடியாக தேர்வை ரத்து செய்ய வேண்டு...

AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் வி.பி.கந்தவேல் கட்சியிலிருந்து ராஜினாமா

கோயம்புத்தூர் தெற்கு மாவட்ட AIADMK சூலூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் வி.பி.கந்தவேல், கட்சியின் தற்போதைய நிகழ்வுகளால் மன...

கோவை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கும் பணிகளை கோவை மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் கைப்பந்து, இறகுபந்து, கபடி, Wushu உள்ளிட்ட விளையாட்டுகளுக்கான உள்விளையாட...