கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்வில் ஆளுநர் பங்கேற்பு

கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் சர்வதேச யோகா தினம் முன்னிட்டு யோகா நிகழ்வு நடைபெற்றது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.


கோவை: சர்வதேச யோகா தினம் இன்று கடைப்பிடிக்கப்படுவதை முன்னிட்டு பல்வேறு இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதுமட்டுமின்றி யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை லாலி ரோடு பகுதியில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் யோகா நிகழ்ச்சி இன்று ஜூன்.21 நடைபெற்றது.



இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு யோகா பயிற்சி பெற்றனர்.



இதில் தமிழ்நாடு ஆளுநரும் வேளாண்மை பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டார்.



இந்நிகழ்வில் ஈஷா யோகா மையம் உட்பட பல்வேறு யோகா பயிற்சி பள்ளியினரின் யோகாசன நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் யோகாசனத்தால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி யோகாசனம் உடலுக்கும் மனதிற்கும் ஆத்மாவிற்கும் நன்மை தரும் என கூறினார். மேலும்திருமூலரையும் நினைவு கூர்ந்தார். தற்பொழுது யோகாவை அதிகமானோர் ஆர்வமுடன் கற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்த அவர் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமானார் யோகா பயிற்சி மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் முடிவில் பல்கலைக்கழக வளாகத்திற்குள், "தாயின் பெயரில் ஒரு மரம்" என்பதன் அடிப்படையில் மரக்கன்று ஒன்றை ஆளுநர் நட்டு வைத்தார். இந்த மரக் கன்று நடும் நிகழ்வில் தாயின் பெயரில் ஒரு மரம் என்ற தலைப்பில் வைக்கப்பட்ட பேனரின் ஹிந்தி எழுத்துகளுக்கு பதிலாக ஆங்கில எழுத்துக்களால் Ek Ped Maa Ke Naam என்ற இந்தி வார்த்தை அச்சிடப்பட்டிருந்தது.

Newsletter

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...

கோவையில் ரயில் மோதி 2 பெண் தூய்மைப் பணியாளர்கள் உயிரிழப்பு

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் ரயில்வே தண்டவாளத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண் ஒப்பந்தப் பணியாளர்கள் ரயில...

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...