மலுமிச்சம்பட்டியில் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மலுமிச்சம்பட்டி அருகே உச்ச நீதிமன்ற தீர்ப்பை மதிக்காமல் பள்ளி அருகே திறக்க உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கோவை பொள்ளாச்சி சாலையிலுள்ள மலுமிச்சம்பட்டி பகுதியில் பள்ளி அருகே செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது. 

இந்நிலையில் கடையின் வாசலை மாற்றி மீண்டும் கடையை அப்பகுதியிலேயே திறக்கும் பணி நடைபெற்று வருவதாக அப்பகுதி மக்கள் குஞ்சாட்டியுள்ளனர். இதனால் பள்ளி குழந்தைகள் பாதிக்கப்படுவதோடு அவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும், பள்ளி அருகே குடித்துவிட்டு மது பாட்டில்களை வீசி செல்வதாகவும், அரசு அதிகாரிகள் இதுகுறித்து எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும், மீண்டும் அங்கு டாஸ்மாக் கடை அமைக்கும் பணி தொடர்ந்தால் கடையை முற்றுகையிட்டு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...