கோவையில் 197 ஊராட்சிகள் திறந்தவெளி கழிப்பறையற்ற ஊராட்சியாக அறிவிக்கப்பட்டுள்ளது என ஊரக வளர்ச்சி முகமை தகவல்

கோவை மாவட்டம் திறந்தவெளி மலம் கழித்தல் அற்ற மாவட்டமாக 2016-17 ஆம் ஆண்டு அறிவிக்க தேர்ந்தெடுக்கப்பட்டு  இவ்வாண்டின் குறியீடான 56615 கழிப்பறைகளில் இதுவரை 47344 வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளது. 



மொத்தமுள்ள 228 ஊராட்சிகளில் 197 ஊராட்சிகள் சுகாதார ஊக்குவிப்பாளர்கள் மற்றும குட்டி கமாண்டோ படையினரின் முழுமையான ஒத்துழைப்புடன் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட்ட 197 ஊராட்சிகளிலும் குட்டி கமாண்டோ படையினர் மூலமாக தொடர்ந்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மீதமுள்ள 31 ஊராட்சிகளில் தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. சுகாதார ஊக்குவிப்பாளர்கள், குட்டி கமாண்டோ படையினர் ஆகியோரின் தொடர்ச்சியான சுகாதார விழிப்பணர்வு நடவடிக்கைகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்க பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்புடன் மீதமுள்ள பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14.4.2017 அன்று சிறப்பு கிராம சபா மூலம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற ஊராட்சிகளாக அறிவிக்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து, கோவை மாவட்டம் திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...