பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சீல்

சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோர் வருகிற 21ம் தேதி ஆஜராக வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சின்னக்காளிபாளையத்தில் முறைகேடாக கிளினிக் மற்றும் மருந்தகங்கள் செயல்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் திருப்பூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கனகராணி, பல்லடம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி, அலுவலக கண்காணிப்பாளர் ஹரி கோபால கிருஷ்ணன் மற்றும் இளநிலை உதவியாளர் ராஜேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர், திருப்பூர் இடுவாய், சின்னக்காளிப்பாளையம் பகுதியில் உள்ள கிளினிக் மற்றும் மருந்தகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அந்த பகுதியில் இருந்த கிளினிக்கில் டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி எம்.பி.பி.எஸ். என்ற மருத்துவரின் பெயர் பலகையில் இருந்தது. ஆனால் அங்கு வரும் நோயாளிகளுக்கு உரிய கல்வி தகுதி இல்லாத அதே இடத்தில் இருந்த மருந்தக உரிமையாளர் லிட்டில் ப்ளோரா என்பவர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது.



இதனை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரிகள் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் கேட்டனர். அப்போது லிட்டில் ப்ளோரா என்பவர் தான் சிகிச்சை அளித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், டாக்டர் மார்சல் முகேஷ் ஆண்டனி என்பவரை தொடர்பு கொண்ட போது தான் அங்கு வருவதில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து முறைகேடாக செயல்பட்ட கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

மேலும் இது சம்பந்தமாக டாக்டர் மெர்சல் மகேஷ் ஆண்டனி, லிட்டில் ப்ளோரா, மெடிக்கலில் வேலை பார்த்து வந்த நளினி ஆகியோரை வருகிற 21-ம் தேதி தகுந்த ஆதாரங்களுடன் இணை இயக்குனர் அலுவலகத்தில் நேரில் ஆஜராக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...