மேட்டுப்பாளையம் நகராட்சி 21வது வார்டில் குடிநீர் குழாயில் இறைச்சிக் கழிவுகள் கலந்து வருவதாக மக்கள் புகார்

மேட்டுப்பாளையம் 21வது வார்ட்டில் குடிநீர் குழாயில் இறைச்சி கழிவுகள் கலந்து வந்ததால் வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டன. நகராட்சி நிர்வாகம் விசாரணையை ஆரம்பித்துள்ளது.


Coimbatore: கோவை மேட்டுப்பாளையம் நகராட்சி 21 வது வார்டில் 1500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இதில் கெண்டையூர் சாமப்பா லேஅவுட்டில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புக்களுக்குஒரு நாள் விட்டு ஒரு நாள் நகராட்சி சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்த பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளுக்கு மிகவும் துர்நாற்றத்துடன் குடிநீர் வந்ததாக தெரிகிறது. மேலும் குடிநீரில் சிறு சிறு துகள்களாக முடி , கொழுப்பு, சிறிய எலும்பு துண்டுகள் கலந்து வந்ததாக தெரிகிறது.

இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த குடிநீரைக் குடித்த ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதாக தெரிகிறது.



பின்னர் இது குறித்து நகராட்சி நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தகவலையடுத்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் மற்றும் நகராட்சி குடிநீர் வழங்கும் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று குடிநீர் குழாயை உடைத்து ஆய்வு செய்தனர்.

அப்போது குடிநீர் வரும் இணைப்பு குழாய் அருகே இறைச்சி கழிவுகள் காணப்பட்டது. இந்த இறைச்சி கழிவுகள் குடிநீர் குழாய்க்குள் எப்படி வந்தது என்பது குறித்து நகராட்சி பணியாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் தற்போது குடிநீர் குழாய்களை சுத்தம் செய்து மீண்டும் இணைப்பு கொடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அந்த வார்டில் உள்ள பொது மக்கள் குடிநீரை குடிக்க அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...