கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் உறவினர்கள் இடையே நடந்த தகராறில் ஒருவர் கொலை..!

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில், குடிபோதையில் மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜய் மற்றும் நண்பர் குமரேசன் இருவரும் கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளனர்.


Coimbatore: கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் உறவினர்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டையில்மருதமுத்து என்பவரை அவரது உடன்பிறந்த அண்ணன் விஜி மற்றும் குமரேசன் ஆகிய இருவரும் குடிபோதையில் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பெரியநாயக்கன்பாளையம் பால விநாயகர் நகர் பகுதியில் குடியிருந்து வருபவர் 41 வயதான மருதமுத்து. இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது வீட்டு எதிரில் உள்ள இவரது அண்ணன் விஜய்யின் மனைவி சித்ரா என்பவரிடம் வெளியில் பொதுவாக உள்ள பாத்ரூம் யாரும் யூஸ் பண்ண கூடாது என்று குடிபோதையில் திட்டி உள்ளார்.

பின்னர் தனது வீட்டின் முன்பு மருதமுத்து உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தபோது எதிரில் உள்ள அவரது அண்ணன் மனைவி சித்ரா வாசல் கூட்டியபோது அவரது சாப்பாட்டில் மண் விழுந்ததால் ஏன் இப்படி செய்கிறாய் என்று கேட்டபோது வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு வந்த அவரது அண்ணன் மகன் ரோஷன் என்பவரை மருதமுத்து கட்டையால் அடித்தும் உள்ளார்.

இதையடுத்து மருதமுத்துவின் அம்மா லட்சுமி தனது பெரிய மகன் விஜய்க்கு போன் மூலம் தகவல் சொன்னதின் பெயரில் குடிபோதையில் ஆட்டோவில் வந்த விஜய் மற்றும் அவரது நண்பர் குமரேசன் ஆகிய இருவரும் சேர்ந்து மருதமுத்து வீட்டினுள் சென்று கழுத்து மற்றும் வயிற்றில் கத்தியால் குத்தியுள்ளனர்.

இதில் மருதமுத்து சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். தகவல் அறிந்து பெரியநாயக்கன்பாளையம் ஆய்வாளர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்து வருகிறார். தப்பி ஓடிய விஜய் மற்றும் குமரேசன் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மேயர் K ரங்கநாயகி ராமச்சந்தி...

காய்ச்சல் பாதிப்பை தடுக்க கோவை மாநகராட்சி புதிய நடவடிக்கை: 24 மணி நேர மையம் தொடக்கம்

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 24 மணி நேர காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையம் துவக்கப்பட்டுள்ளது. காய்ச்ச...

Facing Civic Issues in Your Ward? Submit Your Petition at Mayor’s Grievance Meet Tomorrow

Residents are invited to take part in the Corporation’s weekly Grievance Meeting and submit petitions regarding roads, s...

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...