ஈஷா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் முற்போக்கு இயக்கத்தினர் புகார்

தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் முட்டத்துவயல் பகுதியில் பழங்குடி மக்களுக்கு சொந்தமான நிலத்தில் ஈஷா அறக்கட்டளை சார்பில் மின் தகன மேடை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால் முறையாக மக்களிடம் கருத்து கேட்காமலும், விதிமுறைகளை மீறி மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் அங்கு விதிமீறல் உள்ளதா என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மின் தகன மேடை அமைப்பதில் முறைகேடு உள்ளதா என்பது குறித்து கண்டறிய தபெதிக, தமிழ்புலிகள் அமைப்பு உள்ளிட்ட முற்போக்கு அமைப்பினர் உண்மை கண்டறியும் குழு ஒன்றை அமைத்து கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொள்ள சென்றனர்.

அப்போது அவர்களை ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் முற்போக்கு அமைப்பினர்கள் சென்ற வேன் கண்ணாடியை உடைத்ததோடு, தாக்குதல் நடத்தினர். இது குறித்து முற்போக்கு அமைப்பினர் ஆலாந்துறை போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் முற்போக்கு அமைப்புகள் மீது தாக்குதல் நடத்திய ஈஷா நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க கோரி முற்போக்கு அமைப்பினர் இன்று ஜூன்.18 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணனிடம் புகார் மனு அளித்தனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...