முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழக அரசு உத்தரவு

இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் அரசுப்பள்ளிகளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.



கோவை: முக்கிய பிரமுகர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் சேர்த்து வழங்க ரூ.4.27 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சத்துணவு திட்டத்தின் கீழ் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இனிப்புப் பொங்கல் வழங்க ஆணையிடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக நாள்தோறும் சத்துணவு சாப்பிடுபவர்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள அளவில் அரிசி பயன்படுத்தவும், இனிப்பு பொங்கல் வழங்க தேவைப்படும் வெல்லம் மற்றும் இதர பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள் அன்றைய நாளின் உணவூட்டு செலவினத்திற்குள் வாங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

Teen Girl Dies After Family of Three Consumes Pesticide Near Perur in Coimbatore

In a tragic incident, a family of three allegedly consumed pesticide at their residence in Arumugagoundanur near Perur,...

கோவையில் இயற்கை உபாதைக்கு சென்றவரிடம் கத்திமுனையில் வழிப்பறி: 2 பேர் கைது

கோவை புலியகுளம் அம்மன்குளம் பகுதியில் இயற்கை உபாதைக்கு சென்ற எலக்ட்ரீசியன் மிதுன்குமாரிடம் கத்தி காட்டி மிரட்டி ரூ.7 ஆயி...

Biker Run Over by Bus on Sathy Road in Coimbatore

In a horrific accident, 33-year-old Balamurugan died after falling from his bike and being run over by a bus near Prozon...

தொண்டாமுத்தூர் அரசு விடுதி உணவு வீடியோ: தவறான தகவல் என அதிகாரி தெரிவிப்பு

கோவை தொண்டாமுத்தூரில் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் தங்கும் சமூக நல விடுதியில் 48 மாணவர்கள் தங்கியுள்ளனர். சப்பாத்தி முறைய...

கோவையில் சாலை சீரமைப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்: அமைச்சர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் கலையரங்கத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே. சம்பத்குமார் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்...

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...