தமிழகத்தில் இடைத்தேர்தலை அராஜகமாக நடத்துவதாக வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

கோவை விமான நிலையத்தில் வானதி சீனிவாசன் பேட்டி அளித்தார், தமிழக இடைத்தேர்தலில் சிலர் பண அதிகார பலத்தை அராஜகமாக பயன்படுத்துவதாக குற்றம்சாட்டினார்.


கோவை: டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த பாஜக மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் இன்று ஜூன்.16 கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் இடைத்தேர்தல் என்பது எப்படி அராஜகமாக நடத்துகிறார்கள் பணபலத்தையும் அதிகார பலத்தையும் எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் எனவும் இதையும் மீறி மக்கள் சக்தி மீது நம்பிக்கை வைத்து தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலில் போட்டியிடுகிறது எனவும் அப்போது அவர் தெரிவித்தார்.

அதிமுக ஏன் போட்டியிடவில்லை என்பதற்கு அவர்களே காரணத்தை சொல்லட்டும் என்றும் 2026 தேர்தலில் எந்த கட்சி எப்படி ஓட்டு வாங்க போகிறது என்பதை மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றும் கூறியதுடன், ஒவ்வொருவரும் அவர்கள் எதிர்பார்ப்பை சொல்லிக் கொண்டிருக்கலாம் ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் வரக்கூடிய இரண்டு ஆண்டு காலம் மக்கள் பணி செய்து ஒரு வெற்றி முகமான கூட்டணியாக மாறப்போவதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் குறிப்பிட்டார்.

தற்போது விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட தேசிய ஜனநாயக கூட்டணி எங்கள் கூட்டணி வேட்பாளர் நிற்பதற்காக ஆதரவு கொடுத்து தேர்தலில் கடுமையாக பணியாற்ற போகிறோம் என்றும் தேர்தல் என்பது ஒவ்வொரு அரசுக்கும் கட்சிக்கும் மக்கள் எப்படி மதிப்பீடு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்துவிட்டுதான் என்றாலும் இந்த தேர்தலில் நாங்கள் தைரியமாக போட்டியிடுகிறோம் மக்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் தகவல் என்றும் சுட்டிக்காட்டினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...