குடியிருப்பு பகுதிகளில் மதுக்கடைகளை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம் - போலீஸ் தடியடி, கல்வீச்சு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த காரணம்பேட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை பொதுமக்கள் சிறைபிடித்து போரட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த சாமளாபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டும் எனக்கோரி பொதுமக்கள் பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அப்பகுதி பொதுமக்கள் சாமளாபுரம் - மங்களம் சாலையில் மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், அவ்வழியே வந்த சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கனகராஜை போரட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் சிறைபிடித்து போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து என்ன செய்வது எனத்தெரியாத அவர், டாஸ்மாக் கடையை அகற்றும் வரை தானும் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்து மக்களுடன் அமர்ந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, அப்பகுதீயில் அதிகளவு போலிசர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, அதிகாரிகள் பொது மக்களிடையே  பேச்சுவார்த்தை நடத்தி கடையை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக கூறியும் பொதுமக்கள் போராட்டத்தினை கைவிடாததால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சிலர் காவல்துறையினரின் வாகனங்களை நோக்கி கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

போலீசார் தடியடி நடத்துவதற்கு முன்பாக சூலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம் காவல்துறையினர் பேசி அவரை அங்கிருந்து அனுப்பி வைத்த பிறகே தொடர்ந்து இச்சம்பவங்கள் நடைபெற்றதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

போலீஸ் தடியடியில் பொதுமக்களில் ஒருவருக்கு தலையில் அடிபட்டு அதிகளவிலான ரத்தம் வெளியேறியது. அவரை அருகில் இருந்தோர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக அங்கு பதட்டமான சூழல் நிலவுவதால் பாதுகாப்புக்கு மேலும் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை பத்திரிகையாளர் மீது திருப்பூர் காவல்துறையினர் தாக்குதல்:-

முன்னதாக, திருப்பூரில் மதுக்கடையை அகற்றக்கோரியான பொதுமக்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற கோவை பத்திரிகையாளர்கள் மீது திருப்பூர் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதில், காயம் அடைந்த கோவை பத்திரிகையாளர்கள் கோவை மேற்கு மண்டல ஐஜி பாரி-யிடம் புகார் மனு அளித்தனர். 

அதனைப் பெற்றுக்கொண்ட ஐஜி பாரி, பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் குறித்தான மனு மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...