தேக்கம்பட்டி ஊராட்சியில் ரூ.130.46 கோடி மதிப்பில் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருவதை ஆட்சியர் ஆய்வு

காரமடை ஊராட்சி ஒன்றியம் தேக்கம்பட்டி ஊராட்சியில் இன்று (ஏப்ரல் 11) ரூ.130.46 கோடி மதிப்பில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தொண்டாமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டம் அமைக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 



இதுகுறித்து ஆட்சியர் ஹரிஹரன் கூறுகையில், பவானி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கோவை மாவட்டத்தைச் சார்ந்த தொண்டாமுத்தூர், பூலுவப்பட்டி, தென்கரை, வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, பேரூர் பேரூராடசிகள் மற்றும் தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 134 வழியோர ஊரக குடியிருப்புகளுக்கான கூட்டுக்குடிநீர் திட்டம் ரூ.130.46 கோடிக்கு நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.



மேற்கண்ட 7 பேரூராட்சிகளின் 2014ஆம் ஆண்டின்படி மக்கட்தொகை 71,800 இடைக்கால மக்கட்தொகை (2029) 83,400 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 96,000 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 90 லிட்டர் விகிதாசாரத்திலும் மற்றும் 134 ஊரக குடியிருப்புகளுக்கு (2014) மக்கட்தொகை 72,463 இடைக்கால மக்கட்தொகை (2029) 79,718 மற்றும் உச்சகட்ட மக்கட்தொகை (2044) 86,964 என கணக்கிடப்பட்டு நாளொன்றுக்கு நபர் ஒருவருக்கு 40 லிட்டர் வீதம் மொத்தம் நாளொன்றுக்கு இடைக்கால தேவையான 11.95-அனை மற்றும் உச்சகட்ட தேவையான 13.81 அனை-ஆக கணக்கிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்திற்காக பத்திரகாளியம்மன் கோயில் அருகே செல்லும் பவானி ஆற்றை ஆதாரமாக கொண்டு பவானி ஆற்றில் 3.0 மீட்டர் விட்டம் உள்ள நீர் புகு கிணறு மற்றும் 6.0 விட்டமுள்ள நீர் சேமிப்பு கிணற்றோடு நீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு 500 மி.மீ விட்டமுள்ள குழாய்கள் மூலம் 12.19 கி.மீ தூரத்திற்கு குருந்தமலை கோவில் அருகில் அமைக்கப்படவுள்ள நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.

பின்பு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரானது 500 மி.மீ விட்டமுள்ள நீருந்து குழாய்கள் மூலம் வீரபாண்டி அருகிலுள்ள நீருந்து நிலையத்திற்கு அனுப்பப்படுகிறது.

அங்கிருந்து நீருந்து குழாய்கள் வழியோரத்திலுள்ள வேடபட்டி, தாளியூர், ஆலந்துறை, தொண்டாமுத்தூர், பேரூர் ஆகிய 4 பேரூராட்சிகளுக்கு தேவையான அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிகளும் 134 ஊரக குடியிருப்புக்கான குடிநீர் தனிதனியாக அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர் தேக்க தொட்டியிலும் மற்றும் மீதமுள்ள தென்கரை, ஆலந்துறை மற்றும் பூலுவப்பட்டி பேரூராட்சிகளுக்கு தேவையான குடிநீர் தண்ணீர் பந்தலில் அமைக்கப்படவுள்ள தரைமட்ட நீர்தேக்க தொட்டிக்கு கொண்டு செல்லப்பட்டு பேரூராட்சிகளில் தனித்தனியாக அமைக்கப்படவுள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இத்திட்டத்தில் பிரதான குழாய்கள் மற்றும் துணை பிரதான குழாய்கள் 221.14 கி.மீ நீளத்திற்கும் பகிர்மான குழாய்கள் 149.4 கி.மீ நீளத்திற்கும் பதித்து 39 மேல் நிலை நீர் தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படவுள்ளது. இத்திட்டத்தில் 75 சதவிகித பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இத்திட்டத்தை ஜுன்- 2017ல் முடித்து பொதுமக்கள் பயனுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்தார்.

இந்த ஆய்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை ரூபன் சங்கர் ராஜா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் பாஸ்கரன், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...