சிங்காநல்லூரில் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் திருட்டு - காவல்துறை விசாரணை

அமெரிக்காவில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றுள்ள வேணுகோபால் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருடிச் என்ற மர்ம யார் என்று சிசிடிவி காட்சிகள் மூலம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூர், திருச்சி ரோட்டில் உள்ள அப்பார்ட்மென்டை சேர்ந்தவர் கார்மெல் வேணுகோபால்(60). இவர் கடந்த ஏப்ரல் மாதம் வீட்டை பூட்டி விட்டு தனது மனைவியுடன் அமெரிக்காவில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், நேற்று ஜூன்.9 அவரது வீட்டு கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனைப்பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் கார்மெல் வேணுகோபாலுக்கு போன் செய்து சொன்னார். உடனே கார்மெல் வேணுகோபால், நண்பரான கோவை இருகூரை சேர்ந்த நந்தகோபால்(43) என்பவரிடம் விவரத்தை கூறி வீட்டுக்கு சென்று பார்க்குமாறு தெரிவித்தார்.

அவர் சென்று பார்த்தபோது, வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர் அங்கிருந்த ரூ.1 லட்சத்தை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.பின்னர், இது குறித்து நந்தகோபால் சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார்.

பின் அந்த புகாரின்பேரில், போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் வீட்டுக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு பதிவாகியிருந்த 1 கைரேகை பதிவை கைப்பற்றினர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...