பொள்ளாச்சியில் புதிய உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடம் திறப்பு

பொள்ளாச்சியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் புதிதாக கட்டப்பட்ட உள்நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிடத்தை திறந்து வைத்தார். மேலும் நீட் விலக்கு பெற தமிழக அரசானது சட்ட போராட்டம் தொடர்ந்து நடத்தும் என அவர் தெரிவித்தார்.


கோவை: பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ரூபாய் 72 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நவீன முறையில் உள் நோயாளிகள் கட்டண பிரிவு கட்டிட திறப்பு விழாவில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, தமிழகத்தில் அனைத்து தரப்பு மக்களும் அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை பெறவேண்டும் என்ற அடிப்படையில் தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகள் கட்டணப்பிரிவு வசதி முதல் முறையாக பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை நாய் கடி, மற்றும் பாம்பு உள்ளிட்ட விஷக்கடிகளுக்கான மருந்துகள் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தயார் நிலையில் உள்ளது.

மேலும் இருதய நோயால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட மருத்துவமனைகளில் லோடிங் டோஸ் எனப்படும் உயிர்காக்கும் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் ஏராளமான குளறுபடி நடைபெற்று வருவதாக தமிழக அரசு தொடர்ந்து புகார் தெரிவித்து வந்த நிலையில், தற்போது வட மாநிலங்களிலும் இந்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நீட் விலக்கு பெறுவதற்காக தொடர்ந்து சட்ட போராட்டங்கள் நடத்தப்படும் என தெரிவித்தார்.



இந்த நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி, பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி, நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...