சூலூர் அருகே நடுப்பாளையத்தில் மக்கள் தாக்கியதில் கோவிலில் திருட முயன்றவர் பலி

நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உண்டியலை கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு உடைக்க முயன்றவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் சூலூரை அடுத்த நடுப்பாளையத்தில் மாகாளியம்மன் கோவிலுக்குள், கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு நுழைந்த மர்ம நபர் உண்டியலை உடைக்க முயன்றார். அப்போது, அலாரம் அடித்தது. ஊரின் முக்கியமானவர்களுக்கு மொபைல் போன் அலாரமும் அடித்தது. இதனால், உஷாரான பொதுமக்கள், கோவில் முன் திரண்டனர். உண்டியலை உடைக்க முயன்ற நபரை பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் பலத்த காயமடைந்த அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

விசாரணையில், அந்த நபர் கோவை கோணவாய்க்கால் பாளையத்தை சேர்ந்த அப்துல் சலாம் மகன் சமீர் (27)என்பது தெரிந்தது. அவர் மீது போத்தனுார், சூலுார் ஸ்டேஷன்களில் திருட்டு மற்றும் கஞ்சா வழக்குகள் உள்ளன. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று ஜூன்.7 காலையில் சமீர் உயிரிழந்தார்.

இதையடுத்து, சூலுார் போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தியதில் நடுப்பாளையத்தை சேர்ந்த கனகராஜ் (40), துரைமுருகன் (37), பழனிவேல் (51) உள்ளிட்ட ஐந்து பேர், சமீரை தாக்கியது தெரிந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், மூவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள கதிர்வேல், சந்துருவை தேடி வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...