பொள்ளாச்சியில் மாட்டுச்சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதி வழக்கறிஞர் உயிரிழப்பு

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: பொள்ளாச்சியில் மாட்டுச்சந்தை அருகே அடையாளம் தெரியாத வாகன மோதி வழக்கறிஞர் உயிரிழந்தது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொள்ளாச்சி மகாலிங்கபுரம் எல்ஐஜி காலனி சேர்ந்தவர் சம்சுதீன். இவரது மனைவி கீதா கணவருடன் வசித்து வருகிறார். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பயிற்சி பெற்று வருகிறார்.

இந்நிலையில், நேற்று மாலை தனது அம்மா வீட்டிற்கு செல்ல சென்ற போது, மாட்டு சந்தை அருகே உள்ள இரட்டை கண் பாலம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொள்ளாச்சி பகுதியில் பெண்வழக்கறிஞர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...