கோவை அரசு மருத்துவமனையில் ஊதியம் கேட்டு ஒப்பந்த பணியாளர்களின் திடீர் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் ஊதியம் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களைக் கேட்டு 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கோவை அரசு மருத்துவமனையில் கோவை மட்டுமல்லாமல் திருப்பூர், நீலகிரி, ஈரோடு சேலம் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் உள் மற்றும் வெளி நோயாளிகள் என ஆயிரக் கணக்கான சிகிச்சை பெற்று வருகின்றன. நாள்தோறும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கும் இந்த மருத்துவமனையில் நூற்றுக் கணக்கான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அதில் தூய்மை பணி, காவல் பணி போன்ற பணிகளில் நிரந்தர பணியாளர்கள் உடன் ஒப்பந்த பணியாளர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிலுவைத் தொகை மற்றும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பு உபகரணங்கள் முறையாக வழங்கவில்லை என்றும், இதனை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பும் ஒப்பந்த பணியாளர்களை எவ்வித அறிவிப்புமின்றி பணியில் இருந்து நீக்குவதாக கூறி அதனைக் கண்டிக்கும் விதமாக இன்று ஜூன்.6 கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அறை முன்பு 300-க்கும் மேற்பட்ட ஒப்பந்தப் பணியாளர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்திய நிர்வாகத்தினர் அடுத்த மாதம் ஏழாம் தேதி வழங்கவதாக கூறியதை அடுத்து போராட்டத்தை நிறுத்திக் கொண்டு கலைந்து சென்றனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...