கோவை மருதமலையில் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்து வைக்க வனத்துறை தீவிர முயற்சி

சிகிச்சைக்குப்பிறகு உடல்நலம் தேறியுள்ள தாய் யானையுடன், அதனுடையை குட்டி யானையை, பாகன்கள் உதவியுடன் சேர்த்து வைக்கும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.


கோவை: கோவை, மருதமலை வனப்பகுதியில் கடந்த 30ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று மூன்று மாதமான குட்டி யானையுடன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யானைக்கு வனத்துறையினர் ஐந்து நாட்கள் சிகிச்சை அளித்தனர். இதனிடையே தாயுடன் இருந்த குட்டி யானையை வனத்துறையினர் பராமரித்து வந்த நிலையில், அந்த குட்டி யானை ஒரு யானைக் கூட்டத்துடன் சென்றது.



இதனை வனத்துறையினர் கண்காணித்து வந்த நிலையில், உடல் நலம் தேறிய தாய் யானை மீண்டும் அதே வனப்பகுதிக்குள் விடப்பட்டது. இந்த நிலையில் கூட்டத்துடன் சுற்றி வந்த குட்டி யானை, நேற்று காலை கூட்டத்தில் இருந்து பிரிந்து தனியார் தோட்டத்திற்குள் சுற்றி வந்தது.

இது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், தாய் யானை இருக்கும் குப்பேபாளையம், அட்டுக்கல் வனப்பகுதிக்கு குட்டி யானையை கொண்டு வந்தனர். பின்னர் குட்டி யானைக்கு பழங்கள், இளநீர் கொடுக்கப்பட்டு அதன் தாயுடன் சேர்க்கும் முயற்சி நடைபெற்றது.

பலகட்ட முயற்சிக்கு பின்னரும் தாய் யானையுடன் குட்டி யானை இரவு வரை சேராததால், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து அனுபவம் வாய்ந்த யானை பாகன்கள் வரவழைக்க திட்டமிட்டனர். அதன்படி இன்று ஜூன்.6 டாப்சிலிப் கோழிக்கமுதி யானைகள் முகாமில் இருந்து வரும் யானை பாகன்கள் இன்று மாலை குட்டி யானையை தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நேற்று தாய் யானையுடன் குட்டியை சேர்க்கும் முயற்சி நடைபெறும் போது மழை குறுக்கீடு, தேனீக்கள் தொந்தரவு என பல்வேறு சிக்கல்கள் இருந்த போதிலும் குட்டியை தாயுடன் சேர்க்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.



இதனால் யானை பாகன்கள் உதவியுடன் அதனை சேர்க்க முடிவு செய்துள்ளதாகவும், அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளனர்.

Newsletter

SNR சன்ஸ் அறக்கட்டளை CEO C.V. ராம்குமாருக்கு மதிப்பு மிக்க தொழில் சேவை விருது

Rotary Club of Coimbatore Millennium மற்றும் Ramakrishna Matric Higher Secondary School Interact Club இணைந்து SNR சன்ஸ்...

கோவை-குவைத் இடையே நேரடி விமான சேவை ஏப்ரல் இறுதியில் தொடக்கம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவைத் நாட்டிற்கு Jazeera ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் ஏப்ரல் இறுதியில் நேரடி விமா...

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...