கோவை நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி: மருதமலை முருகன் கோயிலில் கணபதி ராஜ்குமார், டி.ஆர்.பி. ராஜா வழிபாடு..!

வெற்றிவேல் வீரவேல் என முழங்கி, பாஜகவை சூரசம்ஹாரம் செய்வதாக சூளுரை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இடத்தில், வெற்றி சான்றிதழுடன் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

Coimbatore: கோவை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோரை வீழ்த்தி, திமுக வேட்பாளர் முனைவர் கணபதி பா ராஜ்குமார் 1 லட்சத்து 18 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

தேர்தல் வெற்றிக்கு முன்னதாக மருதமலை முருகன் கோயிலில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார். தலைமை கழகத்தால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளராக தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் பி ஆர் பி ராஜா நியமிக்கப்பட்டு இருந்தார்.

இந்த நிலையில், பிரச்சாரத்துக்கு முன்னதாக மருதமலை முருகன் கோயிலில் டிஆர்பி ராஜா கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் வழிபட்டு, மருதமலை பழங்குடி மக்கள் கிராமத்திலிருந்து பிரச்சாரத்தை ஆரம்பித்தனர்.



வெற்றிவேல் வீரவேல் என்ற விளக்கத்தை முழங்கிய டிஆர்பி ராஜா இந்த தேர்தலில் மதவாத சக்திகளை நாட்டு மக்கள் சூரசம்ஹாரம் செய்ய வேண்டும் செய்வோம் என சூளுரைத்திருந்தார். மதவாதம் மற்றும் மிளகு வாதத்தை அடிப்படையாக வைத்து பாஜக அரசியல் செய்வதாக பொது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு தேர்தல் பிரச்சாரமும் சூடு பிடித்தது. இந்த நிலையில், பாஜக, அதிமுக தனது கோட்டையாக நினைத்து வெற்றி வாகை சூட கங்கணம் கட்டி வேலை பார்த்து நிலையில், அவர்களின் கனவை கலைத்தது திமுக திட்டமிடல். கணபதி ப. ராஜ்குமார், தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது ஆரம்பம் முதல் முன்னிலை வகுத்து, வெற்றி அடைந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். இந்த நிலையிலே பிரச்சாரத்தை ஆரம்பித்த இடத்திலேயே வெற்றி பெற்ற பின்னர் தேர்தல் நகர்வை முடித்து இருக்கின்றனர்.

மருதமலை முருகன் கோயிலுக்கு இன்று காலை நாடாளுமன்ற தொகுதிக்கான பொறுப்பு அமைச்சர் டிஆர்பி ராஜா, நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வான கணபதி ராஜ்குமார் மற்றும் திமுகவினர் வழிபாடு செய்தனர். வெற்றிவேல் வீரவேல் என முழங்கி, பாஜகவை சூர சம்ஹாரம் செய்வதாக சூளுரை செய்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட இடத்தில், வெற்றி சான்றிதலுடன் வழிபாடு செய்தது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் கோயம்புத்தூர் மாநகர் மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா கார்த்திக், திமுக மாநில தகவல் தொடர்பு பிரிவு மாநில இணை செயலாளர் பொள்ளாச்சி டாக்டர் மகேந்திரன், வ.மா . சண்முகசுந்தரம், மருதமலை முருகன் கோயில் அறங்காவலர்கள் கணகராஜ், சுகன்யா ராஜ ரத்தினம் , பிரேம் மற்றும் திமுகவினர் ஏராளமான பங்கேற்றனர்.

Newsletter

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...