28 ஆண்டுகளுக்கு பிறகு கோவையில் திமுக பாராளுமன்ற உறுப்பினரை தந்துள்ளனர் - அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா

இனியாவது வெறுப்பு அரசியல் இல்லாமல் அவர்கள் வளர்ச்சி அரசியல் நோக்கி (பாஜக)வருவார்கள் என்று நம்புகிறோம் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்தார்.


Coimbatore: கோவை மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கிராந்தி குமார் பாடி-யிடம்சான்றிதழ்களை பெற்றுக் கொண்டார்.அப்போது அமைச்சர் டி ஆர் பி ராஜா உடன் இருந்தார்.

இதனை தொடர்ந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஜி.சி.டி.கல்லூரி வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், கோவை தொகுதியில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம், தமிழகத்திலும் புதுச்சேரியிலும் நாப்பதும் நமதே என வெற்றி பெற்றுள்ளோம்.கோவை மண்ணில் 28 ஆண்டுகளுக்கு பிறகு திமுக பாராளுமன்றஉறுப்பினரை தந்துள்ளனர்.திமுக கோவையை கைப்பற்றியுள்ளது.

பாசிசத்துக்கு எதிரான மகத்தான வெற்றியை கண்டுள்ளோம்,தொடர்ந்து கோவை மக்களுக்கு அற்புதமான திட்டத்தை தருவோம். ஒட்டுமொத்த தாய் குலமும் திமுகவிற்கு வெற்றியை தந்துள்ளனர்.நிச்சயமாக அனைத்து வாக்குறுதியும் நிறைவேற்றி தரப்படும். இந்த வெற்றிக்கு கோவை மக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

பெண்களுக்கு கொடுத்துள்ள மகத்தான திட்டத்திற்கு தான்தலைவருக்கு கிடைத்த தொடர் வெற்றி.திமுக தலைவர் நாகரிக அரசியலுக்கு பெயர் போனவர். இந்த மண்ணில் வெறுப்பு அரசியல் இருக்கக் கூடாது இனியாவது அவர்கள் வெறுப்பு அரசியல் இல்லாமல் வளர்ச்சி அரசியலை நோக்கி வருவார்கள் என நம்புகிறோம்.

விமான நிலைய விரிவாக்க பணியில் ஒட்டுமொத்த நில எடுப்பு பணியை திமுக தான் முடித்துள்ளது. விரைவில் விமான நிலைய விரிவாக்கம் செய்து முடிக்கப்படும் என தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...