தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு கோவையில் பாதுகாப்பு பணிகள் தீவிரம்

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதை முன்னிட்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


கோவை: 2024 நாடாளுமன்றத் தேர்தல் இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. கோவை நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்ததை தொடர்ந்து அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.

இந்நிலையில், நாளை நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாடு முழுவதும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணிகளில் இன்று ஜூன்.3 ஈடுப்பட்டுள்ளனர்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையத்தில் இருந்து 100 மீட்டருக்கு எந்த ஒரு கட்சியினரும், பொதுமக்களும் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதால் தடுப்புகள் அமைப்பதற்கு பேரிகேட் ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கோவை மக்களவை தொகுதிக்கு 123 வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்களும், 123 வாக்கு எண்ணிக்கை உதவியாளர்களும், 127 நுண் பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் கோவை மக்களவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...