வால்பாறை அருகே காட்டு யானை தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..!

விடுமுறை தினத்தை முன்னிட்டு தனது வீட்டுக்கு வந்த கல்லூரி மாணவன் புதுகாடு எஸ்டேட் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் உயிரிழந்தார்.



Coimbatore: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சேக்கல்முடி எஸ்டேட் பகுதியில் புதுகாடு பகுதியில் குடியிருந்து வரும் சுரேஷ் என்பவரது மகன் முகேஷ் வயது பதினெட்டு இவர் மலுமிச்சம்பட்டி பகுதியில் எஸ்என்எம்வி கல்லூரி முதலாம் ஆண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். இவர் விடுமுறை தினத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனிடையே, நேற்று மாலை வால்பாறை வந்து விட்டு வீட்டிற்குச் செல்லும் வழியில் புதுகாடு எஸ்டேட் பகுதிக்கு சென்று உள்ளார். வன பகுதியில் இருந்து வந்தஇரண்டு காட்டு யானைகள் சாலையில் நின்று உள்ளது. யானையை பார்த்து பைக் நிறுத்தி உள்ளனர். இதில் யானை இவர்களை தாக்கியது. இதில் சந்தோஷம் என்பவர் லேசான காயத்துடன் தப்பி ஓடினார். முகேஷ் என்பவரை யானை தாக்கியதில் பலத்த காயம் அடைந்து உள்ளார். இவரை பொதுமக்கள் காப்பாற்றி எஸ்டேட் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உள்ளனர் அங்கு இவர் இறந்து விட்டதாக தெரிவித்த நிலையில்

வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டு உள்ளனர்.



கல்லூரி மாணவன் காட்டு யானை தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...