தடாகம் மற்றும் மதுக்கரை பகுதிகளில் கஞ்சா விற்பனை - இருவர் கைது

கோவை மாவட்டம் தடாகம் மற்றும் மதுக்கரை பகுதிகளில் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த முருகன் மற்றும் ராஜேந்திர பிரசாத் கைது. குண்டர் தடுப்பு சட்டம் கீழ் சிறையில் அடைப்பு.


கோவை: கோவை மாவட்டம் தடாகம் காவல் நிலைய பகுதியில் 12 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த முருகன் (69) என்பவரை தடாகம் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

மேலும் பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முருகன்(69) மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். 

அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் முருகன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.

இதேபோல, கோவை மதுக்கரை காவல் நிலைய பகுதியில் 11 கிலோகிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த ராஜேந்திர பிரசாத் (64) என்பவரை மதுக்கரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான ராஜேந்திர பிரசாத் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் இன்று மே.31 சிறையில் அடைத்தனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...