கோவை பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கான அனுமதி நாளையுடன் நிறைவு - வனத்துறை அறிவிப்பு

வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி நாளையுடன் 31ஆம் தேதி நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பூண்டி அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை உள்ளது. இங்குள்ள 7-வது மலையில் சுயம்புலிங்கம் கோவில் உள்ளது. சுமார் 5.5 கிலோ மீட்டர் தூரம் மலையேற்றம் செய்தால் இந்த கோவிலை அடையலாம். சுயம்புலிங்கத்தை தரிசிப்பதற்காக பக்தர்கள் மலையேற்றம் செய்வது வழக்கம்.

ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர். இந்த ஆண்டு கடந்த பிப்ரவரி மாதம் 12-ந்தேதி முதல் மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் மலையேறி வந்தனர். சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து தரிசனம் செய்தனர்.

வெள்ளியங்கிரி மலையேற்றத்துக்கு வனத்துறையினர் அளித்த அனுமதி நாளையுடன் 31- ஆம் தேதி நிறைவுபெறுகிறது. அதன் பிறகு மலையேற பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது, மலை உச்சியில் அருள்பாலிக்கும் வெள்ளியங்கிரி கோவிலுக்கு மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு கடந்த பிப்ரவரி 15-ந்தேதி முதல் அனுமதியளிக்கப்பட்டது. அங்கு இதுவரை 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நேரடியாக சென்று சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்று உள்ளனர்.

இதற்கிடையே மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்துவரும் பலத்த மழை காரணமாக அங்குள்ள 5,6,7-வது மலை உச்சியில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது.

மேலும் கோவிலுக்கு செல்லும் மலைப்பாதைகள் சேதம் அடைந்த நிலையில் உள்ளன.

எனவே பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நாளை மே.31 முதல் வெள்ளியங்கிரி மலையேற்றம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

மலையேற வருவோர் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்வதை தவிர்க்கும் வகையில் அவர்களிடம் ரூ.20 வைப்புத் தொகையாக பெறப்பட்டது. இருந்தபோதிலும் அவர்களில் 94 சதவீதம் பேர் வைப்பு தொகையை திரும்ப பெற்றுவிட்டனர்.

வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டபோது அங்கு சுமார் 6 டன் அளவில் பிளாஸ்டிக் பொருட்களும், ஈரத்துணிகளும் சேகரித்து அப்புறப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...