நீலகிரி தேயிலை விவசாயிகளுக்கு வசதியாக குறுஞ்செய்தி சேவை துவக்கம்


இந்தியப் பிரதமர் மோடியின் 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தின் படி, நீலகிரி தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகள் பயனடையும் வகையில் புதிதாக குறுஞ்செய்தி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் இத்திட்டத்தினை துவக்கி வைத்து பேசுகையில், நீலகிரி தேயிலை வாரியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 25 ஆயிரம் சிறிய தேயிலை விவசாயிகளுக்கு மாதத்திற்கு 5 முறை என குறுஞ்செய்தி அனுப்பப்படும். இதனால், விவசாயிகள் சந்தை நிலவரம் உள்ளிட்டவற்றை அறிந்துகொண்டு பயனடையலாம்" என்றார்.



இதுகுறித்து, தேயிலை வாரிய நிர்வாக இயக்குனர் பால்ராசு கூறுகையில், இத்திட்டத்தின் கீழ் தேயிலை விவசாயிகளுக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்திகள் மூலம், பச்சை இலை விலை நிலவரம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, தர பராமரிப்பு மற்றும் மானியங்கள், சராசரி விலை உள்ளிட்ட முக்கிய குறிப்புகளை தெரிந்துகொள்ளலாம் என்றார்.

தேயிலை வாரிய துணை இயக்குனர் ஹரிபிரகாஷ் நாயர் கூறுகையில், இந்த குறுஞ்செய்தி அனுப்பும் திட்டத்தின் மூலம் வங்கி உடன் சிறிய விவசாயிகள் இணைக்கப்பட்டு அவர்களுக்கு உதவ திட்டமிடப்பட்டுள்ளது என்றார். 

இத்திட்டத்தின் மூலம் விவசாயிகள் சரியான காலத்தில் தங்களது பணியினை செய்து லாபம் மற்றும் உற்பத்தியினை அதிகரிக்க முடியும் என தேயிலை வாரிய துணைத் தலைவர் டி.ஹெக்டே தெரிவித்தார்.

Newsletter

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...