தாராபுரம் அருகே தேங்காய் மஞ்சி குடோனில் தீ விபத்து – ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதம்

தொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான தேங்காய் மஞ்சி குடோனில் திடீர் மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீயை நான்கு மணி நேரம் போராடி தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தினர். தீ விபத்தில் ரூ.80 லட்சம் மதிப்பிலான தேங்காய் நார் மஞ்சு சேதமானது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த பொட்டிக்காம்பாளையம் அருகே உள்ளதொட்டிபாளையம் கிராமத்தில் ரவி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீ சரவணா கையர்ஸ் என்ற பெயரில் தேங்காய் நார் தொழிற்சாலை செயல்பட்டுவருகிறது.

தேங்காய் மட்டையிலிருந்து மஞ்சை பிரித்தெடுத்து அதிலிருந்து பதப்படுத்தப்பட்ட தேங்காய் நாரை பிரித்தெடுத்து இயந்திரங்கள் மூலம் பண்டல்கள் ஆக இந்த கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது. கேரளா மற்றும் நாகர்கோவில், பொள்ளாச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்கிருந்து தேங்காய் நார்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது வழக்கம்.



கடந்த ஒரு மாதமாக ரூ.80 லட்சம் மதிப்புள்ள தேங்காய் நார்கள் ஏற்றுமதிக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் இன்று மதியம் 1மணி அளவில்தேங்காய் மஞ்சி அடுக்கி வைத்திருந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் மின்கசிவால் தேங்காய் மஞ்சியில்தீ பற்றியது.

மளமளவென்று கிடங்கு முழுவதும் பரவியதால், தீயை கட்டுப்படுத்த முடியாத தொழிலாளர்கள் தாராபுரம் மற்றும் உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் சுமார் 4மணி நேரம்போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தேங்காய் மஞ்சி பண்டல்கள் முற்றிலுமாக தீயில் கருகி சேதமானது.தீ விபத்து குறித்து குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...

போலி சான்றிதழ் காட்டி ரூ.25.5 லட்சம் மோசடி: இரு ஆசிரியர்களுக்கு 3½ ஆண்டு சிறை

கிருஷ்ணகிரி மாவட்டம் பாப்பனூர் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் டி.வினோத்குமார் மற்றும் நிதிலன் ஆகியோர் போலி சம்பளச் சான்றிதழ் க...

கோவை முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் முத்தண்ணன் குளத்தில் 350-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் இன்று மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச்...

கோவை வீரகேரளத்தில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து: ₹2 கோடி பொருட்கள் எரிந்து சாம்பல்

கோவை வடவள்ளி அருகே வீரகேரளம் சின்மயா நகர் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா பிளாஸ்டிக் குடோனில் மின் கசிவு காரணமாக தீ விபத்து...

கோவையில் நாளை (19.09.2026) காந்திபுரம் உள்பட பல பகுதிகளில் மின்தடை

கோவை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 19, 2026 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மண...

கோவையில் ஏ.டி.எம். கொள்ளை முயற்சி - துப்புரவு தொழிலாளியால் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு 3-வது வீதியில் உள்ள கரூர் வைஸ்யா வங்கி ஏ.டி.எம். மையத்தை உடைத்து பணம் கொள்ளையடிக்க முயன்...