கோவை வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சி-2024 வரும் 25ம் தேதி தொடக்கம் - ஆட்சியர் அறிவிப்பு

அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இப்பொருட்காட்சியானது தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும்.



Coimbatore: கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி இன்று (மே.23) வெளியிட்டுள்ள அறிக்கையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் அரசின் திட்டங்களை விளக்கும் வகையிலான அனைத்து துறைகளின் சார்பில் கண்காட்சி அரங்குகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறும் வகையில் அரசுப்பொருட்காட்சியானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன்படி, இந்த ஆண்டு வருகின்ற (25.05.2024) சனிக்கிழமை அன்று மாலை 5 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் அரசுப் பொருட்காட்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட உள்ளார். இந்நிகழ்ச்சியில் மாநகர காவல் ஆணையர், மாநகராட்சி ஆணையாளர், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

இப்பொருட்காட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறை, சுற்றுலாத்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை, காவல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, சமூக நலத்துறை, தோட்டக்கலைத்துறை, பொதுப் பணித் துறை, இந்து சமய அறநிலையத் துறை, பள்ளிக் கல்வித் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, கைத்தறி மற்றும் கதர் கிராமத் தொழில் துறை, நெடுஞ்சாலைத் துறை, போக்குவரத்துத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மீன் வளத்துறை ஆகிய 27 அரசுத் துறைகளும் தங்கள் துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் பார்த்து பயன்பெறும் வண்ணம் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கோயம்புத்தூர் மாநகராட்சி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஆவின், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் ஆகிய அரசு சார்பு நிறுவனங்கள் சார்பிலும் இப்பொருட்காட்சியில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் திட்டங்கள் மட்டுமின்றி பொழுதுபோக்கு அம்சங்களும் இப்பொருட்காட்சியில் இடம் பெற்றுள்ளன. இப்பொருட்காட்சியானது தினந்தோறும் மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் 45 நாட்களுக்கு தொடர்ந்து நடைபெறும். 

அரசுப்பொருட்காட்சியை காண வரும் பெரியவர்களுக்கு ரூ.15/-ம், சிறியவர்களுக்கு ரூ.10/-ம், பள்ளிகள் மூலம் அழைத்து வரப்படும் மாணவ மாணவியர்களுக்கு சலுகை கட்டணமாக ரூ.5/-ம் நுழைவுக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பொழுதுபோக்கு அம்சத்துடன் துவங்கப்பட உள்ள அரசு பொருட்காட்சியில் பொதுமக்கள் கலந்து கொண்டு அரசின் திட்டங்களை அறிந்துக்கொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கிராந்தி குமார்பாடி இ.ஆ.ப., கேட்டுக்கொண்டுள்ளார்.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...