மழை நீர் வடிகால்களில் கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன் நேரில் ஆய்வு

கிக்கானி பள்ளி அருகில் அமைந்துள்ள பட்டேல் சாலை, உப்பிலிபாளையம், அவிநாசி மேம்பாலம் கீழ்பகுதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன் மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழை நீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன்இன்று (23.05.2024) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் நீர் வழித்தடங்கள் மற்றும் பாதாள சாக்கடைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி மாநகராட்சி ஆணையாளர்மத்திய மண்டலத்திற்குட்பட்ட கிக்கானி பள்ளி அருகில் அமைந்துள்ள பட்டேல் சாலை, உப்பிலிபாளையம், அவிநாசி மேம்பாலம் கீழ்பகுதி, பழைய போஸ்ட் ஆபீஸ் சாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலை, ரயில்வே சாலை உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள மழைநீர் வடிகால்களை நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டு, மழைநீர் செல்லும் வழித்தடங்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை உடனடியாக சரி செய்யவும் மற்றும் மழைக்காலங்களில் மழைநீர் உடனடியாக வெளியேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



தொடர்ந்து, மாநகராட்சி ஆணையாளர் மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்-65 வீரப்ப தேவர் காலனி பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் தூய்மை பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் மழைக்காலங்களில் தேங்கும் மழை நீரை வெளியேற்றுவது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக, மாநகராட்சி ஆணையாளர், லங்கா கார்னர் பகுதியில், மழை நீரை வெளியேற்றும் வகையில் வடிகாலுடன் கூடிய ரெடிமேடு சிறு பாலம் அமைக்கப்பட்டு வருவதையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.



மேலும், மத்திய மண்டலத்திற்குட்பட்ட வார்டு எண்- 32 சங்கனூர் மெயின் ரோடு ரத்தினபுரி, கன்னுசாமி கவுண்டர் லே-அவுட் பகுதியில் மழைக்காலங்களில் இப்பகுதியில் தேங்கும் மழை நீரை விரைவாக வெளியேற்றும் வகையில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணிகளை விரைவாக மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் சிவகுருபிரபாகரன், சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது, மாநகர தலைமைப் பொறியாளர் அன்பழகன், உதவி ஆணையாளர் செந்தில்குமரன், உதவி செயற்பொறியாளர் பிரபாகரன், மண்டல சுகாதார அலுவலர்கள், உதவி பொறியாளர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...