கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் யானை தாக்கி காவலாளி பலி

வனத்தில் இருந்து வெளியேறிய யானைக்கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழைந்தது. அப்போது விரட்ட முயன்ற காவலாளி சண்முகத்தை அந்த யானை, துதிக்கையால் தூக்கி வீசியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.


கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மேற்கு மலை தொடர்ச்சி பகுதியை ஒட்டியவாறு உள்ளது. பல்கலைக்கழகத்தின் பின்புறத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் காணப்படுவது உண்டு.

இந்த நிலையில் இன்று மே.23 அதிகாலை வனத்தில் இருந்து வெளியேறிய 13 யானைகள் சோமவம்பாளையம் அருகே உள்ள வடவள்ளி போலீஸ் நிலையத்தின் அருகே நின்று கொண்டு இருந்தன. தகவல் அறிந்து விரைந்து சென்ற வனத்துறையினர் யானையை வனப்பகுதியை நோக்கி விரட்டினர்.

அந்த கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒற்றைக் காட்டு யானை திடீரென பாரதியார் பல்கலைக்கழகத்தில் உள்ளே நுழைந்தது. பாரதியார் பல்கலைக்கழகத்தில் இருக்கக்கூடிய கேன்டீன் அருகே யானை முகாமிட்டு இருந்தது. இதை கண்ட ஊழியர்கள் யானை இருப்பதை அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலாளிகளிடம் தெரிவித்தனர்.

அப்போது காலை 10 மணி அளவில் காவலர்கள் சுரேஷ், சண்முகம், ஹரி ஆகியோர் யானையை விரட்ட முயன்றனர். ஆனால் யானை அங்கிருந்து நகராமல் சத்தம் போட்டது. ஆவேசம் அடைந்த யானை காவலர்களை துரத்தியது. 3 காவலர்களும் யானையிடம் இருந்து தப்பிக்க ஓடினர்.

இதில் சண்முகம் (வயது 57) என்ற காவலரை யானை துதிக்கையால் தூக்கி வீசியது. அதில் பலத்த காயம் அடைந்த சண்முகத்தை அங்குள்ள ஊழியர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பலியான சண்முகத்துக்கு சொந்த ஊர் நீலகிரி மாவட்டம் ஆகும். முன்னாள் ராணுவ வீரரான இவர், கோவை ஐ.ஓ.பி. காலனியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தார். யானை தாக்கியதில் சரவணன் என்ற காவலர் சிறு காயத்துடன் தப்பினார். பட்டப்பகலில் யானை தாக்கி காவலாளி உயிரிழந்த சம்பவம் பல்கலைக்கழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் யானை நீண்ட நேரமாக பல்கலைக்கழகத்திலேயே முகாமிட்டு இருந்தது. அதனை அங்கிருந்து துரத்த வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...