கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வுக்கூட்டம்

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆய்வுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அறிவுறுத்தினார்.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தலைமையில் இன்று மே.22 நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர், ஒவ்வொரு மாதமும், சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்று வருகின்றது. அதன்படி மாவட்டத்தில் நடைபெற்ற சாலை விபத்துகள் குறித்தும், அவற்றை தவிர்க்க தொடர்பாக சம்மந்தப்பட்ட துறை மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாலை விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க இருசக்கர வாகனம் ஓட்டும் போது தலைக்கவசமும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும்போது சீட் பெல்ட்டும் கட்டாயம் அணிய வேண்டும். வாகன ஓட்டுநர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பது, சாலை விதிமுறைகளை முழுமையாக கடைபிடிப்பது போன்றவற்றின் மூலம் விபத்துகளில் இருந்து நம்மை பாதுகாக்கலாம்.

சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடையே துண்டு பிரசுரங்கள், ஒலி பெருக்கி வாயிலாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று ஆட்சியர் தெரிவித்தார்.

சாலைகளில் தேவையான இடங்களில் வேகத்தடையும், சாலையின் நடுவில் இருக்கும் தடுப்புச் சுவர்களை பாதசாரிகள் கடந்த செல்லாதவாறும் அமைக்க வேண்டும்.தேவையான இடங்களில் சாலையின் இருபுறமும் போதுமான அளவு மின் விளக்குகள் அமைத்தல், ஒளிரும்பட்டைகள், எச்சரிக்கை பலகை, ரவுண்டனா தானியங்கி சிக்னல்கள், உயர் கோபுர மின்விளக்குகள், சாலையின் நடுவில் வெள்ளை நிறக்கோடுகளை இடுதல் பயணிகள் நிழற்குடை அமைத்தல், பழுதடைந்த சாலைகளை விரைவாக சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை சம்மந்தப்பட்ட துறைகள் மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், துணை ஆணையர் (போக்குவரத்து) ரோகித்நாதன் ராஜகோபால், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா, வருவாய் கோட்டாட்சியர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...