உடுமலை சிறுமிகள் பாலியல் வழக்கு - சிவா தங்கும் விடுதிக்கு சீல் வைப்பு

சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த சிவா தங்கும் விடுதிக்கு, உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம் உள்ளிட்ட அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் ஆறு வாலிபர்கள் உட்பட மூன்று சிறுவர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர்.அதைத் தொடர்ந்து உடுமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடுமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு 14 வயது சிறுவர்கள், ஒரு 15 வயது சிறுவன் உட்பட 9 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சிறுமிகளை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட உதவியாக இருந்த தனியார் விடுதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது. இந்த நிலையில் கடந்த 15-ம் தேதி இரவு சிவா தங்கும் விடுதி மேனேஜர் சாமுவேல்(60) என்பவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.



அத்துடன் போலீசாரும் இது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த சூழலில் விடுதிக்கு வருகை தருகின்ற நபர்கள் குறித்து முறையாக விசாரணை செய்யாமலும், உரிய ஆவணங்கள் இல்லாமலும் தங்குவதற்கு அனுமதி அளித்து சட்டவிரோத செயலுக்கு உறுதுணையாக இருந்ததாக வரப்பட்ட, காவல்துறை மற்றும் வருவாய் துறை அறிக்கையின் அடிப்படையில் தங்கும் விதியை மூடி சீல் வைக்க உடுமலை தாசில்தார் ப. சுந்தரம் உத்தரவிட்டார்.

அதை தொடர்ந்து இன்று உடுமலை ஆர்.டி.ஓ ஜஸ்வந்த் கண்ணன், தாசில்தார் சுந்தரம், போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், மண்டல துணை தாசில்தார் சந்திரசேகரன், வருவாய் ஆய்வாளர் சரவணக்குமார், கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் விடுதிக்கு சீல் வைத்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 51 மனுக்கள் பெறப்பட்டன

கோவை மாநகராட்சியில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆணையாளர் க...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் ராகிங் எதிர்ப்பு வார விழா நிறைவு

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆகஸ்ட் 12 முதல் 18 வரை நடைபெற்ற ராகிங் எதிர்ப...

கோவையில் மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 61% நிறைவு: விடுபட்ட வீடுகளுக்கு உதவி எண்கள் வெளியீடு

கோவை மாநகராட்சியில் ஆகஸ்ட் 1 முதல் நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்ட வீட்டு பட்டியல் பணி 61% நிறைவடைந...

கோவையில் 283 ஆக்கிரமிப்புகள் அகற்றம்; அனுமதியற்ற விளம்பரப் பலகைகளுக்கு கடும் நடவடிக்கை

கோயம்புத்தூர் மாநகராட்சி ஜூலை 23 முதல் 283 ஆக்கிரமிப்புகளையும், 46 அனுமதியற்ற விளம்பரப் பலகைகளையும் அகற்றியுள்ளது. மேற்க...

மேட்டுப்பாளையம் ஓடந்துறையில் மர்ம நபர்களால் மூன்று இருசக்கர வாகனங்கள் தீ வைப்பு - பொதுமக்கள் பீதி

மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை இயேசு துரை சந்து பகுதியில் இரண்டு நாட்களில் மூன்று இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து மர்ம ந...

கடன் தள்ளுபடி செய்யும் வரை வங்கிக் கடன் கட்ட மறுப்பு: கோவையில் விவசாயிகள் சங்கம் தீர்மானம்

சோமையனூரில் ஜாதி, மதம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி முழுமைய...