சமூக சேவைப் பணிகள் குறித்து தனியார் பெரு நிறுவனங்களுடன் கோவை மாநகராட்சி ஆலோசனைக் கூட்டம்

சமூக சேவையில் தனியார் பெரு நிறுவனங்களும் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றன. அதன்படி கோவை மாநகராட்சியுடன் இணைந்து சோசியல் கேபிட்டல், டாய்லட் ஃபர்ஸ்ட், நோ டம்பிங், நோ ஃபுட் வேஸ்ட், மை ஷாப்பிங் மை பேக், கோயம்புத்தூர் க்ளைமேட் ஜேஞ், ட்ரீ ட்ரேன்ஸ்பிளேஷன், டாக்டர்.கலாம் லைப்ரரி, ஸ்வச் பாரத் ஸ்வச் வித்யாலயா உள்ளிட்டவை இணைந்து கடந்த வருடம் பல நலத்திட்டங்களை செயல்படுத்தின.



இத்திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்தும், தற்போது 2017 வருடத்தில் மேற்கொள்ள வேண்டிய சமூகப் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் கோவையில் ஒரு தனியார் விடுதியில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன், ரூட்ஸ் குழுமத்தின் இயக்குநர் ராமசாமி, சிஎஸ்ஆர் தலைவர்கள் எல்எம்டபில்யு-வின் நடராஜ், சிஆர்ஐ பம்ஸ்-யின் ராஜா மற்றும் தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதில் பங்கேற்ற தன்னார்வ தொண்ட நிறுவனத்தினர், கோவை மாநகரத்தில் செயல்படுத்தி வரும் சமூகப் பணிகளை மேலும் அதிகரிக்க வேண்டும் என கூறினர். மேலும், திறந்தவெளிக் கழிப்பிடங்களை முற்றிலும் தடுக்க திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. 



இதனைத்தொடர்ந்து, எஸ்.என்.ஆர். சன்ஸ் குழுமம் சார்பில் கிரடாய் அமைப்புடன் இணைந்து 50 கழிப்பிடம் கட்டித்தருவாக உறுதியளிக்கப்பட்டது.

தொடர்ந்து இந்நிகழ்வில், ஸ்வச் பாரத் பணியில் பங்கேற்று தங்களது முழு சேவையையும் வழங்கிவரும் உறுப்பினர்கள் கவுரவிக்கப்பட்டனர். 

இக்கூட்டத்தில் தனியார் பெரு நிறுவனங்களும், மாநகராட்சியும் மட்டுமின்றி வங்கிகள், சமூக ஆர்வலர்கள், ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...