உடுமலை அருகே தமிழக எல்லையில் தடுப்பணை கட்டும் பணியில் கேரள அரசு தீவிரம்

கேரள மாநிலம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. இதனால், குடிநீர் பஞ்சம் ஏற்படும் என்று தமிழக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கேரளா மற்றும் தமிழக வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகளை ஆதாரமாகக் கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது.



அணைக்கு ஏற்படுகின்ற நீர்வரத்து மற்றும் நீர் இருப்பை பொறுத்து புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனத்தின் மூலமாக திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்தில் 54 ஆயிரத்து 637ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாய் மூலமாக சுற்றுப்புற கிராமங்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்களும் செயல் படுத்தப்பட்டு வருகிறது.



இந்த நிலையில் கேரளா அரசு அமராவதி அணையின் பிரதான நீர் வரத்தான சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை துவக்கி உள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், தேவிகுளம் தாலுகாவில் உள்ள வட்டவடா கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட பெருகுடா என்னும் இடத்தில் சிலந்தை ஆற்றை தடுத்து தடுப்பணை கட்டும் பணியை கேரளா அரசு தொடங்கி உள்ளது. அமராவதி அணைக்கு தங்கு தடை இல்லாமல் வந்து கொண்டிருந்த ஆற்று நீரை குடிநீர் தேவைக்கு எடுப்பதாக கூறி கேரளா அரசு அங்கு ஒரு தடுப்பணையை கட்டி வருகிறது.

இது குறித்து விசாரிக்கையில் அந்த பகுதியில் அமைய உள்ள தண்ணீர் சுத்திகரிக்கும் கம்பெனிக்காக அந்த தடுப்பணை கட்டப்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். இந்த தடுப்பணை கட்டப்படுவதால் அமராவதி அணைக்கு வரும் நீர் வரத்து நின்று விடக்கூடும். இதனால் அணையை ஆதாரமாகக் கொண்ட பாசன நிலங்கள் பாலைவனமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கி குடிநீர் பஞ்சமும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு, கேரளா அரசுடன் போர்கால அடிப்படையில் பேச்சுவார்த்தை நடத்தி தடுப்பணை கட்டும் பணியை தடுத்து நிறுத்துவதுடன், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டுமான பணியையும் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் அமராவதி பாசன விவசாயிகள், பொதுமக்கள் நலன் கருதி போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம் என்று தெரிவித்தனர்.

Newsletter

சரவணம்பட்டி, மேட்டுப்பாளையத்தில் போலீசார் சோதனை - போதைப் பொருள் கடத்தல்காரர்கள் 3 பேர் கைது

கோவை சரவணம்பட்டி அரசு டாஸ்மாக் பார் அருகே தடை செய்யப்பட்ட போதைப் பாக்குகள் விற்பனை செய்த சிவகங்கை வாலிபர் கைது. 27.8 கில...

ஈரோடு-திருப்பூர் இடையே ரயில் பாலப்பணி: மூன்று ரயில்கள் தாமதம்

ஈரோடு-திருப்பூர் இடையே உள்ள உத்துக்குளி ரயில்வே யார்டில் ரயில் பாலப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் செப்டம்பர் 13, 1...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் யுவா 2026 முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சி

கோவை ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளின் மு...

கோவை மேற்கு மண்டலத்தில் காமராஜர் உணவு திட்ட சமையல் கூடத்தில் மாநகராட்சி ஆணையர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா மேற்கு மண்டலத்தில் பெருந்தலைவர் காமராஜர் உணவு திட்ட சமையலகம், வடவள்ளி பாதாள சாக்கட...

Coimbatore Police Discuss Safety, Procession Arrangements Ahead of Vinayagar Chaturthi

Coimbatore City Police Commissioner Dr. N. Kannan chaired a consultation meeting with representatives of Hindu organisat...

கோவையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்தாய்வு கூட்டம்

கோவை மாநகர காவல் ஆணையர் Dr.N.கண்ணன் தலைமையில் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், ஊர்வல வழித்தடங்கள்...