ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் காட்டு யானைகள் குடும்பமாக உறங்கும் வீடியோ வைரல்

அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார்.


கோவை: பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில் பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி மற்றும் உடுமலை, அமராவதி என 6 வனச்சரகங்கள் உள்ளது. இந்த வனச்சரகங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு மாடு உள்ளிட்ட வன விலங்குகளும், அரியவகை பறவைகளும் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள ஒரு பகுதியில் காட்டு யானை குடும்பம் ஒன்று உறங்கும் அழகிய காட்சி வெளியாகி உள்ளது. அடர்ந்த வனப்பகுதியில் தாய் யானையுடன் குட்டியானை உறங்கும்போது அந்த யானைகளுக்கு பாதுகாப்பிற்காக மூன்று யானைகள் அதனை சுற்றி படுத்து உறங்கிக் கொண்டுள்ளது.



இந்த யானைகளுக்கு பாதுகாப்பாக ஒரு யானை காவலுக்கு நின்று கவனித்துக் கொண்டுள்ளது. இந்த காட்சிகளை தமிழக வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...