திருமணம் ஆகாத பெண் போலீசிடம் செல்போன் எண் கேட்பு - திருச்சி நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மீது பெண் காவலர் புகார்

வேனில் வரும் போது திருமணம் ஆகாத என்னிடம் சவுக்கு சங்கர், எனது செல்போன் நம்பரையும், பெயரையும் கேட்டார். ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கு சவுக்கு சங்கர் அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார் என்று நீதிமன்றத்தில் ஆஜராகி பெண் காவலர் தெரிவித்தார்.


கோவை: திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த வழக்கிற்காக, சவுக்கு சங்கர் இன்று மே.15 திருச்சி அழைத்து செல்லப்பட்டார். இந்நிலையில் கோவையிலிருந்து திருச்சி அழைத்து செல்லும் வழியில் பாதுகாப்பிற்கு வந்த பெண் காவலர்கள் தன்னை தாக்கியதாகவும், அதனை வீடியோவாக பதிவு செய்து காவல்துறையை சேர்ந்த வாட்சப் குழுக்களுக்கு அனுப்பியதாகவும் திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நீதிபதியிடம் சவுக்கு சங்கர் கூறிய நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அவரை பரிசோதிக்க திருச்சி மகளிர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனையடுத்து அரசு மருத்துவமனையில் சவுக்கு சங்கருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்பு திருச்சி நீதிமன்றத்தில் நீதிபதி முன்பாக காரசார விவாதம் நடந்தது. அப்போது, இந்த ஒரு விவகாரம் தொடர்பாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் வழக்கு தொடர்வது தேவையில்லாத ஒன்று என சவுக்கு சங்கர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் அரசு தரப்பில் சவுக்கு சங்கரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால் தான் உண்மை தெரிய வரும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.

பின் போலீஸ் வேனில் தன்னை தாக்கிய பெண் காவலர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என சவுக்கு சங்கர் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த விவாதம் நடந்து கொண்டிருக்கையில் சவுக்கு சங்கரை அழைத்து வந்த பெண் காவலர் ஒருவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சவுக்கு சங்கர் தன்னை மிரட்டியதாகவும், எங்களது பெயரை மீடியாவில் சொல்லி தவறான தகவல்களை பரப்புவேன் என்று கூறியதாக குற்றம் சாட்டினார்.

அதே சமயம் இன்னொரு பெண் காவலர், "வேனில் வரும் போது திருமணம் ஆகாத என்னிடம் சவுக்கு சங்கர் செல்போன் நம்பரையும், பெயரையும் கேட்டார் என்றும் ஒருவேளை என் பெயரை சொல்லி இருந்தால் எனக்கு சவுக்கு சங்கர் அவப்பெயர் ஏற்படுத்தி இருப்பார் என்று குற்றம் சாட்டினார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...