கோவை ஆட்சியர் அலுவலகத்தில் தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்பு கூட்டம்

ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.


கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் இடிஐ இந்தியா நிறுவனத்துடன் இணைந்து ஓராண்டு தொழில் முனைவோர் பயிற்சிக்கான பட்டயபடிப்புக்கான பாடத் திட்டம், முக்கியத்துவம், மாணவர் சேர்க்கை விதிமுறைகள் மற்றும் பட்டயபடிப்பு தொடர்பான கூட்டம் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர் தலைமையில் நடைபெற்றது.



இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர்.ஏற்கனவே இதற்கான கூட்டம் மதுரையில் நடைபெற்ற நிலையில் இன்று கோவையில் நடைபெற்றது.



வரும் 22-ம் தேதி அன்று திருச்சியில் நடைபெற உள்ளது.



பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய இடிஐஐ நிறுவனத்தின் இயக்குனர் கூடுதல் தலைமைச் செயலாளர் உமாசங்கர், இந்த ஓராண்டு படிப்பில் கலந்து கொள்ள மாணவர்கள் கட்டாயமாக பட்டயப் படிப்பு படித்திருக்க வேண்டும். அவர்களுக்கு வயது வரம்பு 30-க்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு முழுவதும் இந்த பயிற்சிக்கு 500 மாணவர்கள் மட்டுமே சேர முடியும். அதில் ஆன்லைன் மூலமாக தேர்வு எழுதி 60% தேர்ச்சி பெற வேண்டும். நேர்காணலில் 40% பெற்றால் மட்டுமே இந்த படிப்பில் சேர முடியும் என்று கூறினார்.

இந்தப் படிப்பை வெளியில் சென்று படித்தால் 5 மடங்கு கட்டணம் அதிகமாக இருக்கும். மாணவர்கள் இதில் ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பயனடைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

இதில் பயிற்சி பெறும் மூலம் வேலை வாய்ப்பை உருவாக்கும், தொழில் முனைவர்களாக மாற்றுவதற்காக பயிற்சியாக இருக்கும். கடந்த 24 ஆண்டுகளாக இடிஐ அகமதாபாத் நிறுவனம் இந்த பயிற்சியை வழங்கி வருகிறது. 50 சதவீதம் அகமதாபாத் நிறுவனம் பாடம் எடுக்கும். மீதம் 50% பாடத்தை தமிழ்நாடு பேராசிரியர்கள் பாடம் நடத்துவார்கள்.

தற்போது வரை அகமதாபாத் நிறுவனத்தில் பயிற்சி பெற்ற மாணவர்கள் 79 சதவீதம் தொழில் முனைவராக உருவாகியுள்ளார்கள். இடிஐ இந்தியா அகமதாபாத் நிறுவனம் நடத்தி வரும் கல்வி முறையில் செய்முறை பயிற்சி வழியாகவே அதிகமாக மாணவர்களுக்கு கற்றுக் கொடுப்பார்கள். இந்த நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பத்தை ஆன்லைன் மூலமாக இடிஐஐ தமிழ்நாடு நிறுவனத்தின் இணையதளம் மூலமாக நேரடியாக விண்ணப்பிக்கலாம்.

இதற்கு எந்த விதமான விண்ணப்ப கட்டணம் கிடையாது.இந்த பட்டயப் படிப்பானது வருகின்ற ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் துவங்க இருக்கிறது என்று தெரிவித்தார்.

Newsletter

விநாயகர் சதுர்த்தி: கடந்த ஆண்டு 1.5 லட்சம் சிலைகள் பிரதிஷ்டை; இந்தாண்டு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், கடந்த ஆண்டை விட இந்தாண்டு தம...

கோவை மாநகராட்சி சொத்துவரி வசூலில் ₹38.43 கோடி கூடுதல் வசூல்

கோவை மாநகராட்சி 2026-27ஆம் நிதியாண்டில் சொத்துவரி வசூலில் சென்ற ஆண்டை விட ₹38.43 கோடி கூடுதலாக வசூலித்துள்ளது. நடப்பு கே...

இன்ஸ்டாகிராம் காதலுக்கு எதிர்ப்பு?: பல்லடம் அருகே வீடு புகுந்து தாய் - மகள் வெட்டிக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பச்சாபாளையம் பகுதியில் வீடு புகுந்து தாய் மற்றும் மகளை அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது

கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இளநிலை மற்றும் முதுநில...

கோவையில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம்: கொலை வழக்குப்பதிவு; 5 மாணவர்களிடம் தீவிர விசாரணை

கோவை ஒத்தக்கால்மண்டபம் அருகே உள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தில் 5 மாணவர்களை காவல்த...

அமராவதி அணை நீர்மட்டம் 51.41 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 34.61 அடி

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை காரணமாக 51.41 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணையின் நீ...