அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர்களுக்கான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யலாம் - கோவை ஆட்சியர் தகவல்

அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), ஆனைகட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், வால்பாறை ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்படுகிறது.



கோவை: கோயமுத்தூர் மாவட்டத்திலுள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியில் சேருவதற்கு விருப்பமுள்ள மாணவ/மாணவியர் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று (மே.15) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், தெரிவித்துள்ளதாவது, மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (மகளிர்), கோவை அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் (பழங்குடியினருக்கானது), ஆனைகட்டி மற்றும் அரசினர் தொழிற்பயிற்சிநிலையம், வால்பாறை ஆகியவற்றிற்கு ஆகஸ்ட் 2024 ஆம் கல்வியாண்டில் பயிற்சியாளர்களின் கலந்தாய்வு சேர்க்கைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் முதல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதில் கோவை அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ELECTRICIAN, MMV, FITTER, TURNER, TURNER (DST), MACHINIST, MACHINIST(DST), R&A/C, COPA, WIREMAN, WELDER, ICTSM, INSTRUMENT MECHANIC, MMTM, PPO, SHEET METAL WORKER, TECHNICIAN MECHATRONICS, FOOD PRODUCTION, INTERIOR DESIGN AND DECORATION EM REMOTELY PILOTED AIRCRAFT (DRONE PILOT) போன்ற பல்வேறு பிரிவுகளில் ( ஆண் - பெண் ) இருபாலருக்கும் ஆறுமாதம், ஓராண்டு மற்றும் ஈராண்டுகள் பயிற்சி அளிக்கப்படும் தொழிற்பிரிவுகளுக்கு சேர்க்கை நடைபெறவுள்ளது.

மேலும், TATA INDUSTRY 4.0 திட்டத்தின் கீழ் புதிய தொழிற்பிரிவுகளான ADVANCED CNC MACHINING TECHNICIAN, INDUSTRIAL ROBOTICS & DIGITAL MANUFACTURING, BASIC DESIGNER & VIRTUAL VERIFIER, MECHANIC ELECTRIC VEHICLE மற்றும் MANUFACTURING PROCESS CONTROL & AUTOMATION முதலிய ஈராண்டு மற்றும் ஓராண்டு தொழிற் பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறவுள்ளது.

பயிற்சியில் சேர விரும்பும் பயிற்சியாளர்களின் விண்ணப்பங்கள் (www.skilltraining.tn.gov.in) என்ற இணையதள முகவரியில் 07.06.2024 இரவு 12.00 மணிக்குள் பதிவு செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் மாணவ/மாணவியர் நலன் கருதி மேற்கண்ட தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை இலவசமாக இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்திக்

கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இதற்கான பயிற்சிக் கட்டணம் முற்றிலும் இலவசம். அனைத்து பயிற்சியாளர்களுக்கும் இலவச மடிக்கணினி, மிதிவன்டி, பேருந்து அட்டை, சீருடைகள், காலணிகள் மற்றும் வரைபடக்கருவிகள், NIMI புத்தகம் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது. பிரதிமாதம் ரூ.750/- வீதம் வருகையின் அடிப்படையில் கல்வி உதவித் தொகை அரசால் வழங்கப்படுகிறது.

இதற்கான கல்வித் தகுதி தொழிற்பிரிவுகளை பொருத்து 8ஆம் வகுப்பு/10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட/மிகவும் பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்டவகுப்பு/பழங்குடியினர் பயிற்சியாளர்களுக்கு உணவு வசதியுடன் தங்கும் விடுதி வசதி (தகுதியின்அடிப்படையில்) வழங்கப்படும். வயது வரம்புன் 14 முதல் 40 வரை (மகளிருக்கு உச்ச வயது வரம்பு இல்லை) இத் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வளாக நேர்காணல் (Campus Interview)மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெற்று வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார்பாடி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை வெள்ளக்கிணரில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் செயற்கை குட்டையில் கரைப்பு

கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் பல்வேறு இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 அறிமுக நிகழ்ச்சி

ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 8, 2026 அன்று காலை 9.30 மணிக்கு முதலாமாண்டு B.E / B....

பாரத் யூரியா உரம் கேரளாவிற்கு கடத்திய கடை உரிமையாளர் மீது குண்டர் சட்டம் நடவடிக்கை

கோயமுத்தூர் மாவட்டம் மதுக்கரையில் 25 டன் மானிய விலை பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளா மாநிலத்திற்கு கடத்திச் சென்ற வழக்கில...

மானிய விலை யூரியாவை கேரளாவுக்கு கடத்திய உர கடை உரிமையாளர் குண்டர் சட்டத்தில் கைது

கடலூரைச் சேர்ந்த உர கடை உரிமையாளர் கணேசமூர்த்தி, 25 டன் பாரத் யூரியா உர மூட்டைகளை கேரளாவுக்கு கடத்த முயன்றபோது மதுக்கரைய...

கற்பகம் பொறியியல் கல்லூரியில் YUVA 2026 நிகழ்ச்சி: UPSC வெற்றியாளர் சிறப்புரை

கோவை, ஒத்தக்கால்மண்டபத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் செப்டம்பர் 9, 2026 அன்று நடைபெற்ற YUVA 2026 – Freshmen In...

கோவையில் மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

அரசாணைகளின்படி அரசு அலுவலகங்களில் அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர் உள்ளிட்ட சகிக்க நீதி தலைவர்களின் படங்களை வைக்க வ...