ஓடையகுளம் பகுதியில் சூறை காற்றில் வாழை மரங்கள் சேதம் - அமைச்சர் முத்துசாமி நேரில் ஆய்வு

பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.


கோவை: பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழை பெய்து வருகிறது.



இந்தநிலையில் இரண்டு தினங்களுக்கு முன்பு பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை மற்றும் ஓடையகுளம் பேரூராட்சிக்கு உட்பட்ட பாறைப்பதி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறை காற்றுடன் பெய்த மழையின் காரணமாக சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள வாழை மரங்கள் சேதம் அடைந்தன.

இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர். இதனை அடுத்து பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை ஆய்வு செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டார்.



இதன் அடிப்படையில் இன்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி ஓடையகுளம் பகுதியில் பாதிக்கப்பட்ட வாழை தோட்டங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் போது, இந்த பகுதியில் பெரிய அளவில் வாழை மரங்கள் சேதமடைந்துள்ளது. வேளாண் துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து ஆய்வு செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அறிக்கை சமர்பித்த பிறகு முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும் வாழைப் பயிர்களுக்கு இன்சூரன்ஸ் பெறுவதில் உள்ள சிக்கல்களை களைந்து அதிகாரிகளுடன் பேசி இன்சூரன்ஸ் பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர், ஆனைமலை உப்பாற்றங் கரையில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ள ஆற்றை பார்வையிட்டார். பின்னர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.



இதில் மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, ஒன்றிய செயலாளார்கள், தேவ சேனாதிபதி, யுவராஜ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் சாந்தலிங்ககுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...