அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி - கோவையில் முன்னாள் சர்வேயர் கைது

முருகன் என்பவரிடம் அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.77 லட்சம் வரை மோசடி செய்த நில அளவையர் கலைசங்கர் மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


கோவை: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 30). இவரது தந்தை முருகன் என்பவர் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் முருகனுக்கு கோவை கலெக்டர் அலுவலகத்தில் நில அளவையராக பணியாற்றி வந்த நெல்லை மாவட்டம் மானூர் பகுதியை சேர்ந்த கலைசங்கர் (36) என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது.

முருகன் தனது மகன் கார்த்திக்கு அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கலைசங்கர் தனக்கு சென்னையில் அரசு பெண் உயர் அதிகாரி ஒருவர் நன்றாக தெரியும். எனவே அவரிடம் பேசி அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார். அரசு வேலை வாங்கித் தர வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது உண்மை என நம்பிய முருகன், தனது மகனுக்கு மற்றும் அவருக்கு தெரிந்த சிலருக்கும் வேலை வாங்கி தர கலை சங்கரிடம் கடந்த 2022-23 காலகட்டத்தில் ரூ.77 லட்சம் கொடுத்துள்ளார். முருகனிடம் அரசு முத்திரையுடன் கூடிய ஜுனியர் உதவியாளர் பணி உள்ளிட்ட பணிக்கான நியமன ஆணையை வழங்கியதாக தெரிகிறது.

ஆனால் அது போலி என்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் தன்னிடம் வாங்கிய ரூ.77 லட்சத்தை திரும்ப கேட்டுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் அளிக்கவில்லை. இதற்கு உடந்தையாக சாந்தி, கனகமணி உள்ளிட்டோர் இருந்து உள்ளனர். இதற்கிடையே முருகன் உடல் நலக்குறைவால் உயிர் இழந்தார்.

எனவே அவரது மகன் கார்த்திக் இது தொடர்பாக கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் கலைசங்கர் (36) மீது மோசடி, நம்பிக்கை மோசடி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து நேற்று (10-05-2024) அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடி சம்பவத்தில் ஈடுபட்டதால் அவர் பணியிலிருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவையில் SFI, DYFI அமைப்பினர் பேரணி

‘நீட்’ தேர்வை ரத்து செய்ய வேண்டும், தேசிய தேர்வு முகமையை கலைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இந்தி...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் புதிய மாணவர்களுக்கான அறிமுக விழா

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியின் கலைநிகழ்த்துக் கலைகள் புலம் 31.08.2026 அன்று 2026-2027 கல்வியாண்டிற்கான இளநிலை, முதுநி...

கோவை மாநகராட்சி கிணறுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மலேரியா, டெங்கு கொசு ஒழிப்புக்காக 100 வார்டுகளில் கம்பூசியா மீன்கள் விடும் பணி தீவிரப்படுத்...

நாளை உலக தென்னை தினம்: கோவையில் சிறப்பு நிகழ்ச்சி; விவசாயிகளுக்கு அழைப்பு

நாளை (செப் 2) உலக தென்னை தினம் கொண்டாடப்படுவதையொட்டி, கோவையில் அண்ணா கலைவாணர் அரங்கத்தில் சிறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்...

கோவையில் முகமூடி அணிந்து பெண்ணிடம் தங்கச் செயின் பறிப்பு: கல்லூரி மாணவர், மாணவி கைது

CCTV காட்சிகளின் உதவியுடன் வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் செயின் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர், மாணவி இருவரை போத்தனூர் போல...