பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற மக்கள் கோரிக்கை

பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக ரூ.115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று (மே.8) இரவு மழை பெய்தது. இதனால் கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் புதியதாக 115 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் மழை தண்ணீர் தேங்கி நிற்கிறது.



இந்த தண்ணீர் வெளியேற போதுமான வழியில்லை. இதனால் இன்று (மே.9) இந்த பாலத்தின் மீது பயணிக்கும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் இதனால் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

எனவே இது குறித்து தக்க நடவடிக்கை எடுத்து பாலத்தின் மேல் உள்ள தண்ணீரை அகற்ற வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...