செண்டுமல்லி வளர்ப்பின் மூலம் நூற்புழுக்கள் குறைந்து மகசூல் அதிகரிக்கும் என வேளாண்மைப் பல்கலை தகவல்

நூற்புழுக்களின் தாக்குதல் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு விவசாயிகளிடையே குறைவாக உள்ளது.  ஒரே வகையான காய்கறிப் பயிரினையோ அல்லது மற்ற பயிரையோ தொடர்ச்சியாக பயிரிடுவதன் மூலம் இத்தகைய நூற்புழுக்கள் மண்ணில் தங்கி இனத்தை பெருக்கி அடுத்தடுத்து பயிர் செய்யும்போது அதிக அளவில் மகசூல் குறைய வாய்ப்புள்ளது.



காய்கறிப் பயிர்களில் பட்டம் இல்லா நேரத்தில் பயிர்சுழற்சி முறையில் செண்டுமல்லியை பயிரிடுவதன் மூலம் நூற்புழுக்களை நன்றாக கட்டுப்படுத்த முடியும். செண்டுமல்லி வேரிலிருந்து ஆல்பா-டெரிதினைல் என்ற வேதிப்பொருள் சுரக்கிறது.

இவ்வேதிப்பொருள் மண்ணில் நூற்புழுக்கள், பூஞ்சாணம், பாக்டீரியா, வைரஸ் மற்றும் ஒருசில பூச்சிகளை கொல்லும் உயிர் கொல்லி பண்பினை கொண்டது. இந்த ஆல்பா-டெரிதினைல் மண்ணில் உள்ள நூற்புழுக்கள் மற்றும் மண்ணில் உள்ள உயிர்கொல்லிகளின் முட்டைகளின் மீது வேதியியல் பாதிப்பினை ஏற்படுத்தி முட்டை பொறிக்கும் திறனை பெருமளவு குறைக்கிறது.

இதனால் இவ்வுயிர் கொல்லிகளின் இனப்பெருக்கம் பாதிக்கப்பட்டு மண்ணில் உள்ள இவற்றின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தப்படுகிறது. செண்டுமல்லி உயிருள்ள பயிரின் வேரிலிருந்தே ஆல்பா-டெரிதினைல் சுரக்கிறது. ஆதலால் பயிர் சுழற்சி முறையில் காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை ஊடுபயிராக குறுகிய காலத்திற்கு (2-3 மாதம்) பயிரிடுவதால் நூற்புழு கட்டுப்பாட்டில் நல்ல பலனை பெறமுடியும்.  

எனவே காய்கறிப்பயிர்களுடன் செண்டுமல்லியை பயிர் சுழற்சி செய்து பின்பு கோடை உழவு செய்தல் மூலம் “வருமுன் காப்போம்” என்ற பழமொழிக்கு ஏற்ப காய்கறிப்பயிர்களால் நூற்புழுக்களை கட்டுப்படுத்தி அதிக மகசூல் பெறமுடியும் என கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக நூற்புழுவியல் துறை ச.சுப்ரமணியன் மற்றும் கி.பூர்ணிமா தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தை திமுக நிர்வாகிகள் ஆய்வு

கோவை மாவட்டத்தில் 10 தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கோவை அரசினர் தொழில்நுட்ப கல்லூரி வாக்கு எண்ண...

கோடையில் ஐஸ்கிரீம் கலப்படம்: உற்பத்தியாளர்கள் மீது தமிழக அரசு தீவிர கண்காணிப்பு

கோடைக்காலத்தில் ஐஸ்கிரீம் மற்றும் குளிர்பானங்களில் கலப்படம் அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை உ...

கோவை உக்கடம் மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை உச்சம்

கோவையில் கடும் வெயில் காரணமாக உக்கடம் ஒருங்கிணைந்த மீன் சந்தையில் கடல் மீன்களின் விற்பனை அதிகரித்துள்ளது. அசைவ உணவு விரு...

நீர்வளத்துறை அறிவிப்பு: கோவை மாவட்ட அணைகளில் தற்போதைய நீர் நிலை

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தொடர் மழை வரத்தால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. திருப்...

தேர்தல் பணிகளுக்குப் பிறகு கோவை குற்றாலம் சுற்றுலாத்தலம் பொதுமக்கள் வரவால் களைகட்டியது

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக ஒரு நாள் மூடப்பட்டிருந்த கோவை குற்றாலம் சுற்றுலாத்தலத்தில் ஞாயிற்றுக்கிழமை அன்று அண்டை...

கற்பகம் மருத்துவக்கல்லூரியின் பட்டமளிப்பு விழா - 2026

கோவை கற்பகம் மருத்துவக்கல்லூரியில் ஏப்ரல் 26ஆம் தேதி நடந்த பட்டமளிப்பு விழாவில் 163 இளங்கலை மற்றும் 10 முதுகலை மருத்துவர...