உக்கடம், புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்பில் வசிக்கும் மக்களை பாதுகாக்க கோரி ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு

நான்காண்டுகளாகியும் பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை உள்ளதாகவும், கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும் மாவட்ட ஆட்சியரிடம் தமிழ் புலிகள் கட்சியினர் மனு அளித்தனர்.


கோவை: கோவை உக்கடம் தெற்கு பகுதியில் வசிக்கின்ற மக்களை மேம்பால பணிகளுக்காக மாநகராட்சி நிர்வாகம் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் புல்லுக்காடு பகுதியில் தற்காலிக குடியிருப்புகளை தகரத்தில் அமைத்து கொடுத்து வசிக்கச் செய்தது.



அதேபோல் வெரைட்டி ஹால் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளையும் மறுசீரமைப்பதற்காக அங்கு வசிக்கும் மக்களையும், அப்புறப்படுத்தி அருகில் இருந்த விளையாட்டு மைதானத்தில் தகரத்தில் தற்காலிக குடியிருப்புகள் அமைத்து மாநகராட்சி நிர்வாகம் வசிக்க செய்தனர்.



இந்த இரண்டு பகுதி மக்களும் அருந்ததியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் நான்காண்டுகளாகியும் அப்பணிகள் முடிவடையாததால் மக்கள் நீண்ட காலங்களாக இந்த தகர குடியிருப்பிலேயே வசிக்கின்ற நிலமை நீடித்து வருவதாகவும், இங்கு கழிப்பிட வசதி, சாக்கடை வசதி, குடிநீர் வசதி ஆகியவை இல்லை எனவும், மின்சார வசதி அடிக்கடி தடைப்படுவதாகவும், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தமிழ் புலிகள் கட்சியினர் தற்பொழுது கோடை வெயில் வாட்டி வருவதால் அம்மக்கள் மிகவும் சிரமப்படுவதாகவும், அவர்களுக்கு போர்க்கால அடிப்படையில் வசதிகளை ஏற்படுத்தி தருமாறும், அதே சமயம் அவர்களுக்கான குடியிருப்புகளை விரைந்து முடித்து ஒதுக்கி தர வேண்டும் என வலியுறுத்தி மனு அளித்தனர். இந்த மனுவானது தமிழ் புலிகள் கட்சியின் தலைவர் இளவேனில் தலைமையில் அளிக்கப்பட்டது.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...