சவுக்கு சங்கர் கைது: கோவைக்கு அழைத்து வரும் வழியில் காவல்துறை வாகனம் விபத்து.

தேனியில் கைது செய்யப்பட்ட சவுக்கு சங்கரை கோவை மத்திய சிறைக்கு கொண்டு வரும் வழியில்,  தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம், காவல்துறை மோதியதில் சவுக்கு சங்கர் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.


கோவை: பெண் காவலர்களை அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கில் இன்று அதிகாலை யூடியூபர் சவுக்கு சங்கர் தேனியில் கைது செய்யப்பட்ட நிலையில்,கைதுக்கு பிறகான ஒரு பரபரப்பான நிகழ்வில், சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூன்று பேர் அடங்கிய காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 







இன்று நள்ளிரவு 3 மணி அளவில் தேனியில் தனியார் ஹோட்டலில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். தேனியில் இருந்து

கோவையில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்திற்கு அவரை காவல்துறை வாகனம்.மூலம் அழைத்து வந்து கொண்டிருந்தனர்.

அப்போது, திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் எதிரே வந்த வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தில் பாதிக்கப்பட்ட சவுக்கு சங்கர் உள்ளிட்ட மூவர் தாராபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...

கோவை மாநகராட்சியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 90% முடிவு; விடுபட்ட வீடுகளுக்கு ICCC உதவி எண்கள் அறிவிப்பு

கோவை மாநகராட்சி பகுதிகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு-2027 முதற்கட்ட வீட்டுக் கணக்கெடுப்பு பணிகள் 90% நிறைவு. விடுபட்ட வீட...

அமராவதி அணை நீர்மட்டம் 57.52 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணை 33.79 அடியாக பதிவு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் நீர்வரத்தால் 57.52 அடியாக உயர்ந்துள்ளது. திருமூர்த்தி அணை 33.79...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது....

சட்டப்பேரவையில் வார்த்தை ஜாலங்களுக்கு இடமளிக்காமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க வேண்டும்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பேரவைத் தலைவர் மற்றும் தமிழக முதல்வர் தெரிவித்ததை...

கோவை மாவட்ட வாள்வீச்சு போட்டி: சித்தாப்புதூர் பெண்கள் பள்ளி மாணவிகள் வெண்கலம் வென்று பெருமை

கோவை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற மாவட்ட அளவிலான வாள்வீச்சுப் போட்டியில் சித்தாப்புதூர் மாநகராட்சி பெண்கள் உயர்ந...