பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் - கோவை ஆட்சியரிடம் இந்திய ஒற்றுமை இயக்கம் மனு

பிரதமர் மோடியின் பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும் உள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் இந்திய ஒற்றுமை இயக்கத்தினர் மனு அளித்தனர்.


கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பொதுமக்களிடையே பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது அவர் பேசிய பல்வேறு கருத்துக்களுக்கு காங்கிரஸ் கட்சியினர், இந்தியா கூட்டணி தலைவர்கள் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நாட்டின் சொத்துக்களில் முதன்மை உரிமை இஸ்லாமியர்களுக்கு தான் உள்ளது என்று சொன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி திரித்து மதவெறிப்பு பிரச்சாரத்தை செய்துள்ளதாகவும், இது போன்ற பேச்சுக்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதாகவும், சமூகத்தில் மத மோதலை தூண்டுவதாகவும், அமைதியை சீர்குலைப்பதாகவும், கூறியுள்ள இந்திய ஒற்றுமை இயக்கத்தினர், தேர்தல் ஆணையம் உடனடியாக இவ்விஷயத்தில் தலையிட்டு பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதை தடை செய்ய வேண்டும் எனவும், தேர்தலில் நிற்பதற்கு தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்திகுமார் பாடியிடம் மனு அளித்தனர்.

இந்த மனுவை இவ்வியக்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நேருதாஸ், பேராசிரியர் காமராஜ், டென்னிஸ் கோவில்பிள்ளை ஆகியோர் அளித்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...