கோவையில் யானை தந்தம் விற்க முயன்ற இரண்டு பேர் கைது - மேலும் இரண்டு பேர் தலைமறைவு

சாய்பாபா காலனி பகுதியை சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்து யானை தந்தத்தை விற்க முயன்ற இரண்டு பேரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், தலைமறைவாக உள்ள மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றனர்.


கோவை: கோவை வனச்சரக எல்லைக்கு உட்பட்ட வடவள்ளி பகுதியில் சட்டவிரோதமாக யானை தந்தம் விற்க முயற்சி செய்வதாக வனத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் நேற்று (மே.1) கோவை வனச்சரக அலுவலர் தலைமையில் கோவை வனச்சரக பணியாளர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்ட போது சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் (40), நல்லாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (40), வடவள்ளி பகுதியைச் சேர்ந்த பிரிட்டோ (43) மற்றும் செல்வராஜ் (38) ஆகியோர் யானை தந்தத்தை சட்டவிரோதமாக விற்க முயற்சி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

பின் விற்பனைக்காக பயன்படுத்தப்பட்ட யானை தந்தம் ஒன்று கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து வடவள்ளி பகுதியை சேர்ந்த பிரிட்டோ மற்றும் செல்வராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் யானை தந்தமானது சாய்பாபாகாலனி பகுதியைச் சேர்ந்த விசாகன் என்பவரது வீட்டில் வைத்திருந்ததாகவும் அதனை சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தெரிவித்தனர்.

அதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி தலைமறைவான மேலும் 2 பேரை வனத்துறை அதிகாரிகள் தனிக்குழு அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

கோவை அரசுப் பள்ளி மைதானங்களில் ஆர்.எஸ்.எஸ். ‘சாகா’ பயிற்சி: நடவடிக்கை கோரி மனு

கோவை காந்திமாநகர் அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் ஆர்.எஸ்.எஸ். 'சாகா' பயிற்சி நடைபெற்றதாகக் கூறி, இதுபோன்ற பயிற்சிகளை...

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) பல்வேறு பகுதிகளில் மின்தடை

அண்ணா பல்கலைக்கழக துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) பராமரிப்பு: 6 பகுதிகளில் மின்தடை

மைலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் கரைய...

குனியமுத்தூர் துணை மின் நிலையம் பராமரிப்பு: நாளை (22.07.2026) மின்தடை

குனியமுத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனால் க...

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (22.07.2026) மின்தடை

மலையடிப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் என...

கோவை மாநகராட்சி தெற்கு மண்டல வளர்ச்சி திட்டங்களை ஆணையர் கட்டா ரவி தேஜா நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெற்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், டெங்கு ஒழிப்பு, சுகாதார மைய கட்டுமானம், டயாலிச...