தமிழக தபால்காரர் பணிக்கு வடமாநிலத்தவரை மோசடி செய்து தேர்வு செய்ததைக் கண்டித்து கோவையில் தலைமை அஞ்சலகம் முற்றுகை

தமிழகத்தில் தபால்காரர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவரை தேர்வு செய்ததாகக் கூறி, கோவையில் தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினருக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தமிழகத்தில் தபால் துறையில் காலியாக இருந்த 300 தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வில் மோசடி செய்து வட மாநிலத்தவர்களை தேர்வு செய்ததாக கூறி தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் ஒரு பகுதியாக கோவை கூட்ஸ்ஷெட் சாலையில் உள்ள மாவட்ட தலைமை அஞ்சலகத்தை முற்றுகையிட்டு அவ்வமைப்பினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது முழக்கங்களை எழுப்பியபடி அஞ்சலகத்திற்குள் நுழைய முயன்றவர்களுக்கும், காவல் துறையினருக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

தபால்காரர் பணியிடங்களுக்காக நடத்தபட்ட எழுத்துத் தேர்வில் தமிழ் தெரியாத வட மாநிலத்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் 100-க்கு 90 மதிப்பெண்கள் பெற்று எப்படி தேர்ச்சி பெற்றனர் என கேள்வி எழுப்பிய அந்த அமைப்பின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன், எழுத்து தேர்வில் முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், தேர்வில் குளறுபடி செய்து தமிழர்களின் வேலை வாய்ப்புகள் பறித்து வட மாநிலத்தவர்களுக்கு அளிக்கப்பட்டு இருப்பதாகவும், இதேபோல மத்திய அரசு பணியிடங்களில் தொடர்ந்து தமிழர் அல்லாதவர்கள் நியமிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், தபால்காரர் பணியிட நியமனங்களை ரத்து செய்து, மறு தேர்வு நடத்த வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.

Newsletter

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...

எதிர்க்கட்சித் தலைவராகிறார் உதயநிதி..! திமுக சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு!

திமுக சட்டமன்ற குழுத் தலைவராக அக்கட்சியின் இளைஞரணி செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார...

மின் கட்டணம் குறைப்பு, புதிய தொழில் கொள்கை, மத்திய நிதி பெற நடவடிக்கை: தமிழக அரசுக்கு தொழில் துறையினர் கோரிக்கை

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற நிலையில், மின் கட்டண குறைப்பு, புதிய தொழில் கொள்கை வகுத்தல், மத்திய அரசுடன் ஒத்துழைப்ப...

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...